Wednesday, December 25, 2019

33) இன்னா நாற்பது


தமிழ்
இலக்கிய வரலாற்றில்

சங்க காலத்தை
அடுத்து வந்த
காலம்

சங்கம் மருவிய காலம்


அதாவது


இருண்ட காலம்
எனக்
குறிப்பிடப்படும்

அது
(சங்கம் மருவிய காலம்)


களப்பிரர்கள்
ஆட்சி செய்த
காலம்

தமிழ் நாட்டின்
புறச்சமயங்களான
சமணமும்
பௌத்தமும்
மேலோங்கி இருந்த
காலம்


அக்காலத்தில்
தோன்றிய
இலக்கியங்கள்தான்

சங்கம் மருவிய கால
இலக்கியம்
என்ற
பெயரால்
குறிக்கப்பட்டது


சங்கம் மருவிய
காலத்தில்
இயற்றப்பட்ட
பதினெட்டு (18)
நூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கு
நூல்கள்

என
வழங்கப்படுகின்றன


குறைந்த அடிகளைக்
கொண்டு
வெண்பா யாப்பில்
அமைந்த
பாக்களின் தொகுதி

கீழ்க்கணக்கு


அவைகள்
முறையே


1)   நாலடியார் (Naaladiyaar)
2)  நான்மணிக்கடிகை (Naanmanikkadigai)
3)   இன்னா நாற்பது (Innaa Naarpathu)
4)  இனியவை நாற்பது (Iniyavai Naarpathu)
5)  கார் நாற்பது (Kaar Naarpathu)
6)  களவழி நாற்பது (Kalavazhi Naarpathu)
7)  ஐந்திணை ஐம்பது (Ainthinai Aimpathu)
8)   ஐந்திணை எழுபது (Ainthinai Ezhupathu)
9)   திணைமொழி ஐம்பது (Thinaimozhi Aimpathu)
10) திணைமாலை நூற்று ஐம்பது (Thinaimaalai Nootru Aimpathu)
11)  திருக்குறள் (Thirukkural)
12) திரிகடுகம் (Thirikadugam)
13) ஆசாரக்கோவை (Aacharakkovai)
14) பழமொழி (Pazhamozhi)
15) சிறுபஞ்சமூலம் (Sirupanchamoolam)
16) முதுமொழிக்காஞ்சி (Muthumozhikaanchi)
17) ஏலாதி (Yelathi)
18) கைந்நிலை (Kainnilai)


பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களைப்
பட்டியலிடும்
ஒரு வெண்பா


நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூல
மின்னிலைய காஞ்சியோ டேலாதி யென்பதூஉங்
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு.


நாலடி நான்மணி நானாற்ப துஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூல
ம்இன்னிலைய காஞ்சியோ டுஏலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு.


இவற்றுள்
(பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள்)

இன்னா நாற்பது
இனியவை நாற்பது
கார் நாற்பது
களவழி நாற்பது

ஆகிய
நான்கும்
நானாற்பது ஆகும்


விளங்கக்கூறின்


கால மிடம்பொருள் கருதி நாற்பான்
சால வுரைத்தல் நானாற் பதுவே.

கால ம்இடம்பொருள் கருதி நாற்பான்
சால உரைத்தல் நான்நாற் பதுவே

(இலக்கண விளக்கம் -
பாட்டியல் சூத்திரம்-91)


இதன் பொருள்


காலம் இடம் பொருள்
இவற்றில் ஒன்றினை
வெண்பா நாற்பதால்
விளங்க உரைப்பது
நானாற்பது


அவ்வகையில்


பொருள் குறித்து
விளங்க உரைப்பன

அதாவது

இன்னது இன்னது
துன்பம் தரும்
(இன்னாதவை)

என்று
எடுத்துரைக்கும்
நாற்பது (40)
வெண்பாக்களை
உடையது

இன்னா நாற்பது
(கபிலர்)


இன்னது இன்னது
இன்பம் தரும்
(இனியவை)

என்று
எடுத்துரைக்கும்
நாற்பது (40)
வெண்பாக்களை
உடையது

இனியவை நாற்பது
(பூதஞ்சேந்தனார்)


இங்கு


பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களில் ஒன்றான
இன்னா நாற்பது
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள்
அறம்/நீதி சார்ந்த நூலான

இது
(இன்னா நாற்பது)


(பாடியவர்)

கபிலர்
என்பவரால்


(பாடல்களின்
அடியெல்லை)

நான்கு
அடிகளைக்
கொண்டு


(பாடல்களின்
பா வகை)

வெண்பாவால்
பாடப்பட்ட


(பாடல்கள்
எண்ணிக்கை)

நாற்பது (40)
பாடல்கள் கொண்ட
தொகுப்பு

(கடவுள் வாழ்த்துடன்
நாற்பத்தொன்று (41)
பாடல்கள்)


இதில்
(இன்னா நாற்பது நூலில்)

164
இன்னா செயல்கள்
கூறப்பட்டுள்ளன


மேலும்


இது
(இன்னா நாற்பது)


இலக்கிய வனப்புகள்
எட்டனுள் (8)

(அம்மை, அழகு, தொன்மை, தோல்,
விருந்து, இயைபு, புலன், இழைபு)

அம்மை என்ற
வனப்பிற்கு உரியது

அதாவது

சில
மெல்லிய
சொற்களாலும்
குறைந்த
அடிகளாலும்
அமைவது

அம்மை வனப்பு


பதினெண்கீழ்க்கணக்கில்
இரட்டை
அற நூல்கள்
என்று குறிப்பிடப்படுவது

இன்னா நாற்பது
இனியவை நாற்பது


இதில்
(இன்னா நாற்பது நூலில்)
இடம்பெறும்

கடவுள் வாழ்த்து
பாடலில்
குறிப்பிடப்படும்
கடவுள்கள்

சிவபெருமான்
பலராமன்
திருமால்
முருகன்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கியம் இன்னா நாற்பது
(பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்)

Tamil Literature Innaa Naarpathu
(Pathinen Keezhkanakku Noolgal)



32) நானாற்பது


தமிழ்
இலக்கிய வரலாற்றில்

சங்க காலத்தை
அடுத்து வந்த
காலம்

சங்கம் மருவிய காலம்


அதாவது


இருண்ட காலம்
எனக்
குறிப்பிடப்படும்

அது
(சங்கம் மருவிய காலம்)


களப்பிரர்கள்
ஆட்சி செய்த
காலம்

தமிழ் நாட்டின்
புறச்சமயங்களான
சமணமும்
பௌத்தமும்
மேலோங்கி இருந்த
காலம்


அக்காலத்தில்
தோன்றிய
இலக்கியங்கள்தான்

சங்கம் மருவிய கால
இலக்கியம்
என்ற
பெயரால்
குறிக்கப்பட்டது


சங்கம் மருவிய
காலத்தில்
இயற்றப்பட்ட
பதினெட்டு (18)
நூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கு
நூல்கள்

என
வழங்கப்படுகின்றன


குறைந்த அடிகளைக்
கொண்டு
வெண்பா யாப்பில்
அமைந்த
பாக்களின் தொகுதி

கீழ்க்கணக்கு


அவைகள்
முறையே


1)   நாலடியார் (Naaladiyaar)
2)  நான்மணிக்கடிகை (Naanmanikkadigai)
3)   இன்னா நாற்பது (Innaa Naarpathu)
4)  இனியவை நாற்பது (Iniyavai Naarpathu)
5)  கார் நாற்பது (Kaar Naarpathu)
6)  களவழி நாற்பது (Kalavazhi Naarpathu)
7)  ஐந்திணை ஐம்பது (Ainthinai Aimpathu)
8)   ஐந்திணை எழுபது (Ainthinai Ezhupathu)
9)   திணைமொழி ஐம்பது (Thinaimozhi Aimpathu)
10) திணைமாலை நூற்று ஐம்பது (Thinaimaalai Nootru Aimpathu)
11)  திருக்குறள் (Thirukkural)
12) திரிகடுகம் (Thirikadugam)
13) ஆசாரக்கோவை (Aacharakkovai)
14) பழமொழி (Pazhamozhi)
15) சிறுபஞ்சமூலம் (Sirupanchamoolam)
16) முதுமொழிக்காஞ்சி (Muthumozhikaanchi)
17) ஏலாதி (Yelathi)
18) கைந்நிலை (Kainnilai)


பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களைப்
பட்டியலிடும்
ஒரு வெண்பா


நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூல
மின்னிலைய காஞ்சியோ டேலாதி யென்பதூஉங்
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு.


நாலடி நான்மணி நானாற்ப துஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூல
ம்இன்னிலைய காஞ்சியோ டுஏலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு.


இவற்றுள்
(பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள்)

இன்னா நாற்பது
இனியவை நாற்பது
கார் நாற்பது
களவழி நாற்பது

ஆகிய
நான்கும்
நானாற்பது ஆகும்


இங்கு


வைத்தியநாத தேசிகர்
இயற்றிய
இலக்கண விளக்கம்
கூறும்

நானாற்பதின் இலக்கணம்
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


கால மிடம்பொருள் கருதி நாற்பான்
சால வுரைத்தல் நானாற் பதுவே.

கால ம்இடம்பொருள் கருதி நாற்பான்
சால உரைத்தல் நான்நாற் பதுவே

(இலக்கண விளக்கம் -
பாட்டியல் சூத்திரம்-91)


இதன் பொருள்


காலம் இடம் பொருள்
இவற்றில் ஒன்றினை
வெண்பா நாற்பதால்
விளங்க உரைப்பது
நானாற்பது


விளங்கக்கூறின்


காலம் குறித்து
விளங்க உரைப்பது

அதாவது

கார் காலத்து
வருவேன் என்று
வினைமேல் சென்ற
தலைவன்

வராமையினால்
தலைவி
பிரிவாற்றாமல்
வருந்துவதைக்

கார்க்காலப்
பின்னணியில்
எடுத்தியம்பும்

நாற்பது (40)
வெண்பாக்களை
உடையது

கார் நாற்பது
(கண்ணங் கூத்தனார்)


இடம் குறித்து
விளங்க உரைப்பது

அதாவது

சோழன்
கோச்செங்கணானுக்கும்
சேரன்
கணைக்கால் இரும்பொறைக்கும்

கழுமலம் என்னும்
இடத்தில்
நடைபெற்ற போரில்

தோல்வியுற்ற
சேரனை விடுவிக்க

சேரனுடைய
நண்பர்
பொய்கையார்

சோழனுடைய
வெற்றியைப்
போர்க்கள
பின்னணியில்
புகழ்ந்து பாடும்

நாற்பது (40)
வெண்பாக்களை
உடையது

களவழி நாற்பது
(பொய்கையார்)


பொருள் குறித்து
விளங்க உரைப்பன

அதாவது

இன்னது இன்னது
துன்பம் தரும்
(இன்னாதவை)

என்று
எடுத்துரைக்கும்
நாற்பது (40)
வெண்பாக்களை
உடையது

இன்னா நாற்பது
(கபிலர்)


இன்னது இன்னது
இன்பம் தரும்
(இனியவை)

என்று
எடுத்துரைக்கும்
நாற்பது (40)
வெண்பாக்களை
உடையது

இனியவை நாற்பது
(பூதஞ்சேந்தனார்)



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கியம் நானாற்பது
(பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்)

Tamil Literature Naanaarpathu
(Pathinen Keezhkanakku Noolgal)



31) நான்மணிக்கடிகை


தமிழ்
இலக்கிய வரலாற்றில்

சங்க காலத்தை
அடுத்து வந்த
காலம்

சங்கம் மருவிய காலம்


அதாவது


இருண்ட காலம்
எனக்
குறிப்பிடப்படும்

அது
(சங்கம் மருவிய காலம்)


களப்பிரர்கள்
ஆட்சி செய்த
காலம்

தமிழ் நாட்டின்
புறச்சமயங்களான
சமணமும்
பௌத்தமும்
மேலோங்கி இருந்த
காலம்


அக்காலத்தில்
தோன்றிய
இலக்கியங்கள்தான்

சங்கம் மருவிய கால
இலக்கியம்
என்ற
பெயரால்
குறிக்கப்பட்டது


சங்கம் மருவிய
காலத்தில்
இயற்றப்பட்ட
பதினெட்டு (18)
நூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கு
நூல்கள்

என
வழங்கப்படுகின்றன


குறைந்த அடிகளைக்
கொண்டு
வெண்பா யாப்பில்
அமைந்த
பாக்களின் தொகுதி

கீழ்க்கணக்கு


அவைகள்
முறையே


1)   நாலடியார் (Naaladiyaar)
2)  நான்மணிக்கடிகை (Naanmanikkadigai)
3)   இன்னா நாற்பது (Innaa Naarpathu)
4)  இனியவை நாற்பது (Iniyavai Naarpathu)
5)  கார் நாற்பது (Kaar Naarpathu)
6)  களவழி நாற்பது (Kalavazhi Naarpathu)
7)  ஐந்திணை ஐம்பது (Ainthinai Aimpathu)
8)   ஐந்திணை எழுபது (Ainthinai Ezhupathu)
9)   திணைமொழி ஐம்பது (Thinaimozhi Aimpathu)
10) திணைமாலை நூற்று ஐம்பது (Thinaimaalai Nootru Aimpathu)
11)  திருக்குறள் (Thirukkural)
12) திரிகடுகம் (Thirikadugam)
13) ஆசாரக்கோவை (Aacharakkovai)
14) பழமொழி (Pazhamozhi)
15) சிறுபஞ்சமூலம் (Sirupanchamoolam)
16) முதுமொழிக்காஞ்சி (Muthumozhikaanchi)
17) ஏலாதி (Yelathi)
18) கைந்நிலை (Kainnilai)


பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களைப்
பட்டியலிடும்
ஒரு வெண்பா


நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூல
மின்னிலைய காஞ்சியோ டேலாதி யென்பதூஉங்
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு.


நாலடி நான்மணி நானாற்ப துஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூல
ம்இன்னிலைய காஞ்சியோ டுஏலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு.


இங்கு


பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களில் ஒன்றான
நான்மணிக்கடிகை
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


நான்மணிகள்
எனும்
தொடரால்
குறிப்பிடப்படுவது

அறிவார்யார்
நல்லாள்
பிறக்குங் குடி
எனும் தொடர்
இடம்பெறுவது


நான்மணிக்கடிகை

(நான்கு + மணி + கடிகை)


இது
(நான்மணிக்கடிகை)

பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள்
அறம்/நீதி சார்ந்த நூல்


நான்கு வகை
மணிகளால்
கோர்க்கப்பட்ட மாலை
நான்மணிக்கடிகை

அதனைப்போல்

ஒவ்வொரு பாடலிலும்
ஒத்த நான்கு
சிறந்த கருத்துகள்
சேர்த்திணைத்துக்
கூறப்படுவதால்

நான்மணிக்கடிகை
எனப்
பெயர்பெற்ற
இந்நூல்


(பாடியவர்)

விளம்பி நாகனார்
என்பவரால்


(பாடல்களின்
அடியெல்லை)

நான்கு
அடிகளைக்
கொண்டு


(பாடல்களின்
பா வகை)

வெண்பாவால்
பாடப்பட்ட


(பாடல்கள்
எண்ணிக்கை)

நூறு (100)
பாடல்கள் கொண்ட
தொகுப்பு

(கடவுள் வாழ்த்து
பாடல்கள் இரண்டுடன்
நானூற்றிரண்டு (102)
பாடல்கள்)


இதில்
(நான்மணிக்கடிகை நூலில்)
இடம்பெறும்


கடவுள் வாழ்த்து
பாடலில்
குறிப்பிடப்படும்
கடவுள்

திருமால்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கியம் நான்மணிக்கடிகை
(பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்)

Tamil Literature Naanmanikkadigai
(Pathinen Keezhkanakku Noolgal)