குரு விஷ்ணு தமிழ் இலக்கியம்
வலைப்பதிவு அறிமுகம்
நூல் பல கல்
இலக்கணமும் இலக்கியமும்
தெரியாதவன்
ஏடு எழுதுதல் கேடு நல்கும்
-
பாரதிதாசன்
மனிதன்
தனது கருத்துகளை
அடுத்தவர்க்கும்
அடுத்த தலைமுறைக்கும்
பகிர்ந்திடவும்
பதிவு செய்திடவும்
ஒலி வடிவிலும்
வரி வடிவிலும்
ஊடகமாய்
உருவாக்கிக் கொண்டது
மொழி.
அம்மொழிக்கு
இலக்கணமும் இலக்கியமும்
இரு கண்கள்.
இலக்கணம்
மொழியின்
அமைப்பையும் அழகையும்
ஐந்து வகைகளாய்
காட்டிடும்.
இலக்கியம்
மனிதனின்
அறிவையும் ஆற்றலையும்
அரிய படைப்புகளாய்
காட்டிடும்.
இங்கு
உயர்தனிச் செம்மொழி
என்ற
சிறப்பினைப் பெற்ற
தன்னிகரில்லாத்
தமிழ் மொழியில்
செய்யுள் கவிதை
கதை காப்பியம்
கட்டுரை கடிதம்
நாடகம் உரையாடல்
ஆகிய வடிவங்களில்
படைக்கப்பட்ட
இலக்கியங்கள்குறித்து
அடியேன்
அறிந்தவற்றை
அனைவருக்கும்
எடுத்துரைக்கும் முயற்சி.
இது ஒரு
இலக்கிய அறிமுகம்
இலக்கியச் சோலை
இலக்கியப் பயணம்
இலக்கியப் புதையல்
இலக்கிய வரலாறு
இலக்கிய விமர்சனம்
இலக்கிய விருந்து
இவண்
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore
- Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் இலக்கியம்
Guru
Vishnu – Tamil Literature /
Ilakkiyam
No comments:
Post a Comment