Wednesday, December 25, 2019

8) சங்க இலக்கியம்


சங்க இலக்கியம்
(பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள்)

Sanga Ilakkiyam
(Pathinenmelkanakku Noolgal)

தொன்மொழி
செம்மொழி
எனும்
பெருஞ்சிறப்பினைப்
பெற்றது

தமிழ் மொழி


தமிழர்களின்
தாய் மொழியும்
திராவிட
மொழிக் குடும்பத்தில்
மூத்த மொழியுமான
அது


கருத்துப்
பொருட்களாய்
எண்ணற்ற
இலக்கியப்
படைப்புகளையும்

காட்சிப்
பொருட்களாய்
கட்டிடக் கலையிலும்
சிற்பக் கலையிலும்
கணக்கற்ற
கலைப்
படைப்புகளையும்

தன்னகத்தே
கொண்ட
உயர்
சிந்தனை மொழி


பாவலரொடு
காவலரும்
கைகோர்த்து
கவிபுனைந்து
கன்னித்தமிழ்
வளர்த்த காலம்

சங்க காலம்


அக்காலத்தில்தான்

பழங்காலத்தில்
தமிழ் மொழியில்
தோன்றி வளர்ந்த
இலக்கியங்களில்

அழிந்து
மறைந்தவை
போக
எஞ்சியவை
காக்கப்பட்டு

புலவர்களாலும்
புரவலர்களாலும்
தொகுக்கப்பட்டு

சங்க இலக்கியம்
என்ற
பெயரால்
குறிக்கப்பட்டது


அவைகள்தாம்
(சங்க இலக்கியங்கள்)

பழங்கால
மக்களின்
மனசாட்சியையும்

வாழ்க்கை
முறையையும்

கண்முன்னே
காட்டிடும்
கண்ணாடிகள்


சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
அப்பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு


இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு நூல்கள்)


விளங்கக்கூறின்


 1) நற்றிணை
 2) குறுந்தொகை
 3) ஐங்குறுநூறு
 4) பதிற்றுப்பத்து
 5) பரிபாடல்
 6) கலித்தொகை
 7) அகநானூறு
 8) புறநானூறு

என எட்டுத்
தொகுதிகளாகத்
தொகுக்கப்பட்ட
எட்டு நூல்கள்

எட்டுத்தொகை
என்றும்


 1) திருமுருகாற்றுப்படை
 2) பொருநராற்றுப்படை
 3) சிறுபாணாற்றுப்படை
 4) பெரும்பாணாற்றுப்படை
 5) முல்லைப்பாட்டு
 6) மதுரைக்காஞ்சி
 7) நெடுநல்வாடை
 8) குறிஞ்சிப்பாட்டு
 9) பட்டினப்பாலை
10) மலைபடுகடாம்

எனப் பத்து
பெரிய பாடல்கள்

பத்துப்பாட்டு
என்றும்
பெயர் பெற்றன



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கியம்
Guru Vishnu – Tamil Literature




No comments:

Post a Comment