Wednesday, December 25, 2019

7) தமிழ் இலக்கிய வடிவங்கள்


தோன்றிய
நாள் முதல்
இன்றைய
நாள் வரை

காலந்தோறும்
மாற்றங்கள் பல
கண்டு

வளர்ந்து
வருவதால்
வளர்தமிழ் என்றும்

எல்லா
வகையிலும்

செம்மை
உடையதால்
செந்தமிழ் என்றும்

உயர்
சிறப்பினைப்
பெற்றது

தமிழ் மொழி


அது
(தமிழ் மொழி)

இலக்கணச் சிறப்பும்
இலக்கிய வளமும்
கொண்ட ஒரு

செம்மொழி


அதில்
(தமிழ் மொழியில்)

செய்யுள் நடை
உரை நடை
ஆகிய இரு
மொழி நடைகளில்

எழுத்து
இலக்கியத்திலும்
வாய்மொழி
இலக்கியத்திலும்

அடிப்படையாய்
அமைந்த

இலக்கிய
வடிவங்களை

இங்கு
வரையறைகளுடன்
பார்ப்போம்


எடுத்துக்கொண்ட
கருத்து விளங்கச்
சுருக்கமாகச்
செய்யப்படுவது

கவிதை
(பா பாடல்
பாட்டு செய்யுள்)


யாப்பு
இலக்கணத்திற்குக்
கட்டுப்பட்டு
எழுதப்படும் கவிதை

மரபுக்கவிதை


யாப்பு
இலக்கணத்திற்குக்
கட்டுப்படாமல்
எழுதப்படும் கவிதை

புதுக்கவிதை
(வசனக்கவிதை)


சிறிய வடிவில்
சீரிய கருத்துகளைச்
சொல்லிட
எழுதப்படும் கவிதை

குறுங்கவிதை
(ஹைக்கூ கவிதை)


நெடுங்கதையைத்
தொடர்நிலைச்
செய்யுளில்
அமைத்துக்கூறுவது

காப்பியம்


எடுத்துக்கொண்ட
கருத்தை நிகழ்வைக்
கற்பனைக்
கலந்துச்சொல்வது

கதை


முடிவில் ஒரு
திருப்பம் கொண்டு
சுருக்கமாக
எழுதப்படும் கதை

சிறுகதை


பல அத்தியாயங்கள்
கொண்டு
நீண்டதாக
எழுதப்படும் கதை

நெடுங்கதை
(தொடர்கதை
நாவல் புதினம்)


வர்ணனையின்றி
உரையாடல்கள்
மட்டும்
இடம்பெறும் கதை

நாடகம்


எடுத்துக்கொண்ட
கருத்தை விவாதித்து
விவரமாக
எடுத்துரைப்பது

கட்டுரை


இருவருக்கிடையே
நடைபெறும்
பேச்சு
தகவல் பரிமாற்றம்

உரையாடல்


இருவருக்கிடையே
நடைபெறும்
எழுத்து
தகவல் பரிமாற்றம்

கடிதம்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கிய வடிவங்கள்

Tamil Literature Forms of Tamil Literature



No comments:

Post a Comment