Wednesday, December 25, 2019

1) கருத்துக் கருவூலம் இலக்கியம்


கருத்துக் கருவூலம் இலக்கியம்

Literature is the Conceptual Treasury

ஆண்டவன்
படைப்பில்

ஆறறிவு
அதிசயம்

மனிதன்


அவனது
வாழ்வில்

ஓர்
இன்றியமையாத்
தேவை

மொழி
Language


அது
(மொழி)

அவனது

தகவல்
பரிமாற்றத்திற்கான
ஊடகம்

அனுபவப்
பகிர்வுக்கான
அடிப்படை

சிந்தனைத்
திறனுக்கான
ஊற்று

கருத்துப்
பதிவிற்கான
கருவி

ஆன்மா
பயணிக்கும்
பாதை


அதன்
(மொழியின்)

இரு
விழிகளாய்
விளங்குவது


ஒன்று

இலக்கணம்
Grammar


மற்றொன்று

இலக்கியம்
Literature


மொழியைக்
கசடற
கற்க
அடித்தளம்

இலக்கணம்


மொழியில்
படைக்கப்பட்ட
கருத்துக்
கருவூலம்

இலக்கியம்


இங்கு

மொழியில்
கருத்துக்
கருவூலமாய்

பல்சுவைகளில்
படைக்கப்பட்ட
இலக்கியத்தின்
சிறப்பு
குறித்து

சற்று
விரிவாக
அறிவோம்


மனிதனின்
உணர்வுகள்
கருத்துகள்
கற்பனைகள்
சிந்தனைகள்

ஒலி
வடிவிலோ
வரி
வடிவிலோ

இயல் இசை
நாடகம் என
மூவகையில்
அமைவது

இலக்கியம்


அது
(இலக்கியம்)


மனித வாழ்வை
மையமாகக்
கொண்டு
படிக்கவும்
கேட்கவும்
பார்க்கவும்
எனப்
படைக்கப்படுவது

மனிதனின்
மனசாட்சியாய்
வாழ்வின்
விளக்கமாய்
காலத்தின்
கண்ணாடியாய்
விளங்குவது

வாழ்விற்கு
வழிகாட்டி
மனதிற்கு
தெளிவூட்டி
நிழலாய்
நம்மைத்
தொடர்வது

மனிதன்
தன் வாழ்வில்
அறம் பொருள்
இன்பம் வீடு
அடைவதற்கு
அடிப்படையாய்
அமைவது

இதனை
நன்கு
உணர்ந்தாலே

ஒவ்வொருவருக்கும்
இலக்கியத்தின்
சிறப்பு
நன்கு விளங்கும்

இலக்கியத்தை
அறிய வேண்டும்
என்ற
எண்ணம் பிறக்கும்

அந்த
எண்ணமே
ஆவலாய் மாறி

இலக்கியத்தின்
இன்சுவையை

நூல் வடிவில்
படித்திடவும்

இசை வடிவில்
கேட்டிடவும்

நாடக வடிவில்
பார்த்திடவும்

ஓர்
உந்துதலாய்
அமையும்



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கியம்
Guru Vishnu – Tamil Literature





No comments:

Post a Comment