சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)
1) நற்றிணை
(Nattrinai)
2) குறுந்தொகை
(Kurunthogai)
3) ஐங்குறுநூறு
(Aingkurunuuru)
4) பதிற்றுப்பத்து
(Pathitrupaththu)
5) பரிபாடல்
(Paripaadal)
6) கலித்தொகை
(Kaliththogai)
7) அகநானூறு (Aganaanuuru)
8) புறநானூறு
(Puranaanuuru)
என எட்டுத்
தொகுதிகளாகத்
தொகுக்கப்பட்ட
எட்டு நூல்கள்
எட்டுத்தொகை
இங்கு
எட்டுத்தொகை
நூல்களில் ஒன்றான
பதிற்றுப்பத்து
குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
நற்றிணை
நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த
பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா
ரேத்தும் கலியே யகம்புறமென்
றித்திறத்த
வெட்டுத் தொகை
நற்றிணை
நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ
றுஒத்த
பதிற்றுப்பத் துஓங்கு பரிபாடல்
கற்றறிந்தா
ர்ஏத்தும் கலியே அகம்புறம்என்
றுஇத்திறத்த
எட்டுத் தொகை
என
எட்டுத்தொகை
நூல்களுள்
நான்காவதாக
இடம்பெறுவது
பாடல்கள்
அனைத்தும்
பாடாண் திணையைச்
சார்ந்தமைந்த நூல்
சேர
அரசர்கள் பற்றி
மட்டுமே
பாடும் நூல்
பரிபாடல் போல்
இசையோடு
பாடப்பட்ட
தொகை நூல்
பாடல்கள்
அனைத்தும்
பாடல்
தொடரால்
பெயர் பெற்ற
ஒரே சங்க
நூல்
பதிற்றுப்பத்து
(பத்து + பத்து =
பதிற்றுப்பத்து)
(பத்து + இன் + இற்று +
பத்து = பதிற்றுப்பத்து)
சேர
மன்னர்கள்
பதின்மரைப்
பற்றி
பத்துப்
பத்தாகப்
பாடிய
பாடல்களின்
தொகுப்பான
இந்நூல்
(பதிற்றுப்பத்து)
(பாடியவர்
எண்ணிக்கை)
பத்து (10)
புலவர்களால்
(அறிந்த
புலவர் 8)
(பாடல்களின்
அடியெல்லை)
எட்டு (8)
அடிச்
சிற்றெல்லையும்
ஐம்பத்தேழு
(57) அடிப்
பேரெல்லையும்
கொண்டு
(பாடல்களின்
பொருள்)
புறப்பொருள்
குறித்து
(பாடல்களின்
பா வகை)
ஆசிரியப்பாவால்
பாடப்பட்ட
(பாடல்கள்
எண்ணிக்கை)
நூறு (100)
பாடல்கள் கொண்ட
தொகுப்பு
(கிடைத்தவை 80)
இந்நூலைத்
(பதிற்றுப்பத்து நூலைத்)
தொகுத்தவர்
தொகுப்பித்தவர்
யாரெனத்
தெரியவில்லை
இதன்
(பதிற்றுப்பத்து நூலின்)
வேறு பெயர்
இரும்புக்கடலை
(பயன்பாட்டில்
இல்லாத
பழஞ்சொற்கள்
மிகுந்த
மிகவும்
கடினமான நடை
என்பதால்
பெற்ற பெயர்)
இந்நூலை
(பதிற்றுப்பத்து நூலை)
முதலில்
பதிப்பித்தவர்
தமிழ்த் தாத்தா
டாக்டர் உ.வே.
சாமிநாதையர்
இந்நூல் குறித்து
(பதிற்றுப்பத்து
குறித்து)
மேலும்
நாம்
அறிய வேண்டியவை
ஒவ்வொரு பத்தின்
பாட்டுடைத்தலைவன்
பாடலைப் பாடியவர்
அதற்காகப்
பாடியவர் பெற்ற பரிசு
இந்நூலின்
(பதிற்றுப்பத்து நூலின்)
முதற் பத்தும்
இறுதிப் பத்தும்
கிடைத்திலது
ஆதலால்
2-ம் பத்து
பாட்டுடைத்தலைவன்
இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதன்
பாடியவர்
குமட்டூர்க் கண்ணனார்
பெற்ற பரிசு
உம்பற்காட்டில்
ஐநூறு ஊர் பிரமதாயமும் முப்பத்தெட்டு ஆண்டு தென்னாட்டு வருவாயில் பாகமும்
3-ம் பத்து
பாட்டுடைத்தலைவன்
பல்யானைச் செல்கெழு
குட்டுவன்
பாடியவர்
பாலைக் கௌதமனார்
பெற்ற பரிசு
புலவனின்
வேண்டுதல்படி பத்து பெரும் வேள்விகள் செய்து புலவரையும் அவர் மனைவியையும்
சுவர்க்கம் புகுவித்தான்
4-ம் பத்து
பாட்டுடைத்தலைவன்
களங்காய்கண்ணி
நார்முடிச்சேரல்
பாடியவர்
காப்பியாற்றுக்
காப்பியனார்
பெற்ற பரிசு
நாற்பது
நூறாயிரம் பொன்னும்
அரசர்
ஆள்வதில் பாகமும்
5-ம் பத்து
பாட்டுடைத்தலைவன்
கடல்பிறகோட்டிய
செங்குட்டுவன்
பாடியவர்
பரணர்
பெற்ற பரிசு
உம்பற்காட்டு
வருவாயும்
அரசன் மகன்
குட்டுவன் சேரலும்
6-ம் பத்து
பாட்டுடைத்தலைவன்
ஆடுகோட்பாட்டுச்
சேரலாதன்
பாடியவர்
காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பெற்ற பரிசு
அணிகலனுக்காக
ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும்
7-ம் பத்து
பாட்டுடைத்தலைவன்
செல்வக் கடுங்கோ
வாழியாதன்
பாடியவர்
கபிலர்
பெற்ற பரிசு
நூறாயிரம்
பொற்காசும்
நன்றா
குன்றின்மீது ஏறி நின்று
தன் கண்ணில்
கண்ட நாடு முழுதும்
8-ம் பத்து
பாட்டுடைத்தலைவன்
தகடூர் எறிந்த
பெருஞ்சேரல் இரும்பொறை
பாடியவர்
அரிசில் கிழார்
பெற்ற பரிசு
ஒன்பது
நூறாயிரம் பொற்காசும்
அரசு
கட்டிலும்
9-ம் பத்து
பாட்டுடைத்தலைவன்
குடக்கோ
இளஞ்சேரல் இரும்பொறை
பாடியவர்
பெருங்குன்றூர் கிழார்
பெற்ற பரிசு
முப்பத்தீராயிரம்
பொற்காசும்
ஊரும்
மனையும் அருங்கல வெறுக்கையும் பிறவும்
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள் – எட்டுத்தொகை – 04-பதிற்றுப்பத்து
No comments:
Post a Comment