சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)
1) திருமுருகாற்றுப்படை (Thirumurugaatrupadai)
2) பொருநராற்றுப்படை (Porunaraatrupadai)
3) சிறுபாணாற்றுப்படை (Sirupaanaatrupadai)
4) பெரும்பாணாற்றுப்படை (Perumpaanaatrupadai)
5) முல்லைப்பாட்டு (Mullaipaattu)
6) மதுரைக்காஞ்சி (Maduraikaanchi)
7) நெடுநல்வாடை (Nedunalvaadai)
8) குறிஞ்சிப்பாட்டு (Kurinjipaattu)
9) பட்டினப்பாலை (Pattinappaalai)
10) மலைபடுகடாம்
(Malaipadukadaam)
என
நீண்ட நெடும்
பாடல்களாக
அமைந்த
பத்துப் பாடல்களின்
தொகுப்பு
பத்துப்பாட்டு
(தொடர்
நிலைச் செய்யுள்)
இங்கு
பத்துப்பாட்டு
நூல்களில் ஒன்றான
திருமுருகாற்றுப்படை
குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
முருகு
பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு
வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு
நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை
கடாத்தொடும் பத்து
முருகு
பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு
வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு
நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை
கடாத்தொடும் பத்து
என
பத்துப்பாட்டு
நூல்களுள்
முதலாவதாக
வைத்து
எண்ணப்படுவது
பன்னிரு திருமுறை
பகுப்பில்
ஒரு பகுதியாகச்
சேர்க்கப்பட்டிருப்பது
பத்துப்பாட்டுக்குக்
கடவுள் வாழ்த்து போல்
அமைந்திருப்பது
முருகக் கடவுளின்
அறுபடை வீடுகள்
குறித்து கூறுவது
பத்துப்பாட்டு
நூல்களுள்
காலத்தால்
பிந்தியதாகக்
கருதப்படுவது
திருமுருகாற்றுப்படை
(திருமுருகு +
ஆற்றுப்படை = திருமுருகாற்றுப்படை)
முருகப் பெருமானைப்
பாட்டுடைத்தலைவனாகக்
கொண்டு
அவரைப் பற்றிய
முழுமையான
செய்திகளைக் கூறும்
இந்நூல்
(திருமுருகாற்றுப்படை)
(பாடல்
ஆசிரியர்)
மதுரை கணக்காயர்
மகனார்
நக்கீரர் என்பவரால்
(பாடல்களின்
அடியெல்லை)
317 அடிகள்
கொண்ட
தொடர் நிலைச்
செய்யுளாய்
(பாடல்களின்
பொருள்)
புறப்பொருள்
குறித்து
(பாடல்களின்
பா வகை)
ஆசிரியப்பாவால்
பாடப்பட்ட
(சிற்றிலக்கிய
வகை)
அருளைப் பெற
ஆற்றுப்படுத்துகின்ற
ஒரு
ஆற்றுப்படை நூல்
இங்கு
ஆற்றுப்படை
என்பதன் பொருள்
வழிப்படுத்தல்
அல்லது
வழிகாட்டுதல்
விளங்கக்கூறின்
பரிசு பெற்ற
ஒருவர்
தன்னைப்போல்
பரிசு பெறச்
செல்லும்
இன்னொருவரை
தன்னைப்போல்
பயனடைய
வேண்டி
தான்
பரிசு பெற்ற
வள்ளலிடமோ
அரசரிடமோ
வழிப்படுத்துவதே
ஆற்றுப்படை
ஆனால்...
திருமுருகாற்றுப்படையின்
சிறப்பு
வீடுபேறு
பெறுவதற்குப்
பக்குவமடைந்த
ஒருவனை
வீடுபேறு
பெற்ற ஒருவன்
வழிப்படுத்துவதாக
அமைந்திருப்பது
அதுமட்டுமன்றி
ஆற்றுப்படை
நூல்களெல்லாம்
பரிசில் பெறச்
செல்வோரால்
பெயர் பெறும்
அம்முறைக்கு
மாறாக
பரிசில்
கொடுப்போரால்
பெயர்பெற்றது
திருமுருகாற்றுப்படை
இதில்
(திருமுருகாற்றுப்படையில்)
குறிப்படப்படும்
முருகப்பெருமானின்
அறுபடை வீடுகள்
1) திருப்பரங்குன்றம்
2) திருச்சீரலைவாய்
(திருச்செந்தூர்)
3) திருவாவினன்குடி
(பழநி)
4) திருவேரகம்
(சுவாமிமலை)
5) குன்றுதோராடல் (திருத்தணி)
6) பழமுதிர்சோலை
இதன்
(திருமுருகாற்றுப்படை
நூலின்)
வேறு பெயர்கள்
முருகு
புலவராற்றுப்படை
இந்நூலை
(திருமுருகாற்றுப்படை
நூலை)
முதலில்
(பக்திப் பாசுரமாகப்)
பதிப்பித்தவர்
சரவணப் பெருமாளையர்
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள் – பத்துப்பாட்டு - திருமுருகாற்றுப்படை
No comments:
Post a Comment