சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)
1) திருமுருகாற்றுப்படை (Thirumurugaatrupadai)
2) பொருநராற்றுப்படை (Porunaraatrupadai)
3) சிறுபாணாற்றுப்படை (Sirupaanaatrupadai)
4) பெரும்பாணாற்றுப்படை (Perumpaanaatrupadai)
5) முல்லைப்பாட்டு (Mullaipaattu)
6) மதுரைக்காஞ்சி (Maduraikaanchi)
7) நெடுநல்வாடை (Nedunalvaadai)
8) குறிஞ்சிப்பாட்டு (Kurinjipaattu)
9) பட்டினப்பாலை (Pattinappaalai)
10) மலைபடுகடாம்
(Malaipadukadaam)
என
நீண்ட நெடும்
பாடல்களாக
அமைந்த
பத்துப் பாடல்களின்
தொகுப்பு
பத்துப்பாட்டு
(தொடர்
நிலைச் செய்யுள்)
இங்கு
பத்துப்பாட்டு
நூல்களில் ஒன்றான
சிறுபாணாற்றுப்படை
குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
முருகு
பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு
வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு
நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை
கடாத்தொடும் பத்து
முருகு
பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு
வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு
நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை
கடாத்தொடும் பத்து
என
பத்துப்பாட்டு
நூல்களுள்
மூன்றாவதாக
குறிப்பிடப்படுவது
கடையெழு
வள்ளல்களின்
கொடைத்தன்மைகள்
அனைத்தையும்
ஒருங்கே பெற்றுத்
திகழ்பவன்
நல்லியக் கோடன்
என்று கூறுவது
வறுமையில்
வாடும்
பாணனின்
வாழ்வியல்
நிலையை
விரிவாய்
விளக்குவது
கடையேழு
வள்ளல்களின்
வரலாற்றைச்
சுருக்கிக்
கூறுவது
அரசர்களின்
கொடைச் சிறப்பும்
விருந்தோம்பல்
குறித்தும் கூறுவது
சிறுபாணாற்றுப்படை
(சிறுபாண் + ஆற்றுப்படை
= சிறுபாணாற்றுப்படை)
(சிறுபாண் –
ஏழு நரம்புகள் கொண்ட
சீறியாழ் மீட்டிக்கொண்டு
பாடுபவர்கள்)
ஓய்மான் நாட்டு
நல்லியக் கோடனைப்
பாட்டுடைத்தலைவனாகக்
கொண்ட
இந்நூல்
(சிறுபாணாற்றுப்படை)
(பாடல்
ஆசிரியர்)
இடைக்கழி நாட்டு
நல்லூர் நத்தத்தனார்
என்பவரால்
(பாடல்களின்
அடியெல்லை)
269 அடிகள்
கொண்ட
தொடர் நிலைச்
செய்யுளாய்
(பாடல்களின்
பொருள்)
புறப்பொருள்
குறித்து
(பாடல்களின்
பா வகை)
ஆசிரியப்பாவால்
பாடப்பட்ட
(சிற்றிலக்கிய
வகை)
பொருளைப்
பெற
ஆற்றுப்படுத்துகின்ற
ஒரு
ஆற்றுப்படை நூல்
இங்கு
ஆற்றுப்படை
என்பதன்
பொருள்
வழிப்படுத்தல்
அல்லது
வழிகாட்டுதல்
அதாவது
பரிசு பெற்ற
ஒருவர்
தன்னைப்போல்
பரிசு பெறச்
செல்லும்
இன்னொருவரை
தன்னைப்போல்
பயனடைய
வேண்டி
தான்
பரிசு பெற்ற
வள்ளலிடமோ
அரசரிடமோ
வழிப்படுத்துவதே
ஆற்றுப்படை
அவ்வகையில்
இது
(சிறுபாணாற்றுப்படை)
பரிசில்
பெற்ற
பாணன் ஒருவன்
(சீறியாழை வாசிக்கும் பாணன்)
பரிசில்
பெறக்கருதிய
பாணனைத்
தான் பரிசு பெற்ற
நல்லியக்கோடனிடம்
ஆற்றுப்படுத்துவதாக
அமைந்தது
இங்கு
பாணர்
என்பது
பண் அமைத்தல்
இசை மீட்டுதல்
நடனம் ஆடுதல்
ஆகிய கலைகளைத்
தொழிலாகக்
கொண்டோரைக்
குறிப்பிடுகின்றது
மேலும்
இந்நூல்
(சிறுபாணாற்றுப்படை)
பரிசில் பெறச்
செல்வோரால்
பெயர் பெற்றது
இதில்
(சிறுபாணாற்றுப்படையில்)
குறிப்படப்படும்
கடையெழு வள்ளல்கள்
1) பேகன்
(கான
மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய
அருந்திற
லணங்கி னாவியர் பெருமகன்
பெருங்க
னாடன் பேகனுஞ்)
2) பாரி
(சுரும்புண
நறுவீ
யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ
முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள்
ளருவி வீழுஞ் சாரற்
பறம்பிற்
கோமான் பாரியுங்)
3) காரி
(கறங்குமணி
வாலுளைப்
புரவியொடு வையக மருள
ஈர
நன்மொழி யிரவலர்க் கீந்த
அழறிகழந்
திமைக்கு மஞ்சுவரு நெடுவேற்
கழறொடித்
தடக்கைக் காரியு)
4) ஆய்
(நிழறிகழ்
நீல
நாக நல்கிய கலிங்கம்
ஆலமர்
செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந்
தாங்கிய சாந்து புலர் திணிதோள்
ஆர்வ
நன்மொழி யாயு)
5) அதிகன்
(மால்வரைக்
கமழ்பூஞ்
சாரற் கவினிய நெல்லி
அமிழ்துவிளை
தீங்கனி யௌவைக் கீந்த
உரவுச்சின்ங்
கனலு மொளிதிகழ் நெடுவேல்
அரவக்கடற்
றானை யதிகனுங்)
6) நள்ளி
(கரவாது
நட்டோ
ருவப்ப நடைப்பரி காரம்
முட்டாது
கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை
பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை
நாட னள்ளியு)
7) ஓரி
(நளிசினை
நறும்போது
கஞலிய நாகுமுதிர் நாகத்துக்
குறும்பொறை
நன்னாடு கோடியர்க் கீந்த
காரிக்
குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக்
குதிரை யோரியு)
இதில்
(பெரும்பாணாற்றுப்படையில்)
குறிப்படப்படும்
கடையெழு
வள்ளல்கள்
1) பேகன்
(மயிலுக்குப் போர்வை)
2) பாரி
(முல்லைக்குப் பெருந்தேர்)
3) காரி
(இரவலர்க்குக் குதிரையும் பெரும்பொருளும்)
4) ஆய்
(சிவனுக்கு நீலநாகம் நல்கிய கலிங்கம்)
5) அதிகன்
(ஔவைக்கு அருங்கனி)
6) நள்ளி
(இரவலர்க்கு பிறரிடம் இரவாதவாறு
பொன்னும்பொருளும்)
7) ஓரி
(இரவலர்க்கு நாடுகள்)
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள் – பத்துப்பாட்டு - சிறுபாணாற்றுப்படை
No comments:
Post a Comment