சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)
1) திருமுருகாற்றுப்படை (Thirumurugaatrupadai)
2) பொருநராற்றுப்படை (Porunaraatrupadai)
3) சிறுபாணாற்றுப்படை (Sirupaanaatrupadai)
4) பெரும்பாணாற்றுப்படை (Perumpaanaatrupadai)
5) முல்லைப்பாட்டு (Mullaipaattu)
6) மதுரைக்காஞ்சி (Maduraikaanchi)
7) நெடுநல்வாடை (Nedunalvaadai)
8) குறிஞ்சிப்பாட்டு (Kurinjipaattu)
9) பட்டினப்பாலை (Pattinappaalai)
10) மலைபடுகடாம்
(Malaipadukadaam)
என
நீண்ட நெடும்
பாடல்களாக
அமைந்த
பத்துப் பாடல்களின்
தொகுப்பு
பத்துப்பாட்டு
(தொடர்
நிலைச் செய்யுள்)
இங்கு
பத்துப்பாட்டு
நூல்களில் ஒன்றான
நெடுநல்வாடை
குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
முருகு
பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு
வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு
நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை
கடாத்தொடும் பத்து
முருகு
பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு
வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு
நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை
கடாத்தொடும் பத்து
என
பத்துப்பாட்டு
நூல்களுள்
ஏழாவதாக
இடம்பெறுவது
தமிழ்த்தென்றல்
திரு.வி.கலியாணசுந்தரனார்
அவர்களால்
தமிழ்ச்சுரங்கம்
எனப்
பாராட்டப்படுவது
கூதிர்கால
வருணனையால்
புலவர் நக்கீரரின்
பெருமையை
நிலைநாட்டுவது
பாண்டிமா தேவியைப்
புனையா ஓவியம்
(கரித்துண்டுகளால்
வரைந்த
வண்ணம்
தீட்டப்படாத ஓவியம்)
என
வருணித்துக் கூறுவது
போர்மேற் சென்ற
அரசன்
கூதிர்காலத்துத்
தங்கும் படைவீடான
கூதிர்ப்பாசறை
குறித்துக் கூறுவது
பத்துப்பாட்டின்
இலக்கிய கருவூலம்
என்று
அழைக்கப்படுவது
நெடுநல்வாடை
(நெடுமை + நன்மை + வாடை
= நெடுநல்வாடை)
தலையாலங்கானத்து
செருவென்ற பாண்டியன்
நெடுஞ்செழியனைப்
பாட்டுடைத்தலைவனாகக்
கொண்ட
இந்நூல்
(நெடுநல்வாடை)
(பாடல்
ஆசிரியர்)
மதுரை கணக்காயர்
மகனார்
நக்கீரர் என்பவரால்
(பாடல்களின்
அடியெல்லை)
188 அடிகள்
கொண்ட
தொடர் நிலைச்
செய்யுளாய்
(பாடல்களின்
பொருள்)
அகப்பொருள்
புறப்பொருள்
ஆகிய
இரண்டையும்
குறித்து
(பாடல்களின்
பா வகை)
ஆசிரியப்பாவால்
பாடப்பட்ட
(பாடலின்
திணை)
முல்லைத்திணை
வஞ்சித்திணை
குறித்த நூல்
இருத்தலும்
இருத்தல்
நிமித்தமும்
முல்லைத்திணை
விளங்கக்கூறின்
வினைமேற்
சென்ற
தலைவன்
வீடு
திரும்பும்வரை
கற்பு
நெறியினின்றும்
வழுவாது
இல்லில்
தலைவி
ஆற்றியிருத்தல்
முல்லைத்திணை
முல்லைத்திணையின்
புறன்
வஞ்சித்திணை
விளங்கக்கூறின்
மண்
ஆசையினாலோ
அல்லது
மதியாத
பகையரசனின்
ஆணவத்தை
அடக்கவோ
மன்னன் ஒருவன்
மற்றொரு மன்னன்
மீது
போர்
தொடுப்பது
வஞ்சித்திணை
ஒருபால்
காதலையும்
மறுபால்
கடமையையும்
அழகுற
சித்தரிக்கின்ற
இந்நூலின்
(நெடுநல்வாடை
நூலின்)
வேறு பெயர்கள்
பத்துப்பாட்டின் இலக்கிய
கருவூலம்
மொழிவளப் பெட்டகம்
சிற்பப் பாட்டு
தமிழ்ச் சுரங்கம்
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள் – பத்துப்பாட்டு - நெடுநல்வாடை
No comments:
Post a Comment