Wednesday, December 25, 2019

26) குறிஞ்சிப்பாட்டு


சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு


இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)


 1) திருமுருகாற்றுப்படை (Thirumurugaatrupadai)
 2) பொருநராற்றுப்படை (Porunaraatrupadai)
 3) சிறுபாணாற்றுப்படை (Sirupaanaatrupadai)
 4) பெரும்பாணாற்றுப்படை (Perumpaanaatrupadai)
 5) முல்லைப்பாட்டு (Mullaipaattu)
 6) மதுரைக்காஞ்சி (Maduraikaanchi)
 7) நெடுநல்வாடை (Nedunalvaadai)
 8) குறிஞ்சிப்பாட்டு (Kurinjipaattu)
 9) பட்டினப்பாலை (Pattinappaalai)
10) மலைபடுகடாம் (Malaipadukadaam)

என
நீண்ட நெடும்
பாடல்களாக
அமைந்த
பத்துப் பாடல்களின்
தொகுப்பு

பத்துப்பாட்டு
(தொடர் நிலைச் செய்யுள்)


இங்கு


பத்துப்பாட்டு
நூல்களில் ஒன்றான
குறிஞ்சிப்பாட்டு
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து

என

பத்துப்பாட்டு
நூல்களுள்
எட்டாவதாகச்
சொல்லப்படுவது

கோவை நூல்களுக்கு
வழிகாட்டியாய்த்
திகழ்வது

99 வகையான
சங்க கால
மலர்களைக்
குறிப்பிடும் நூல்

குறிஞ்சித்திணைக்கு
மிகுந்த
நயம் சேர்க்கும்
அறத்தொடு நிற்றல்
குறித்து விளக்குவது


குறிஞ்சிப்பாட்டு


அறத்தொடு நிற்றல்
என்ற
அகத்துறைக்குச்
சிறந்த
எடுத்துக்காட்டாய்
விளங்கும்

இது
(குறிஞ்சிப்பாட்டு)


ஆரிய அரசன்
பிரகதத்தனுக்குத்
தமிழ்
அகத்திணையின்
சிறப்பை
அறிவுறுத்த


(பாடல்
ஆசிரியர்)

கபிலர்
என்பவரால்


(பாடல்களின்
அடியெல்லை)

261 அடிகள்
கொண்ட
தொடர் நிலைச்
செய்யுளாய்


(பாடல்களின்
பொருள்)

அகப்பொருள்
குறித்து


(பாடல்களின்
பா வகை)

ஆசிரியப்பாவால்
பாடப்பட்ட


(பாடலின்
திணை)

குறிஞ்சித்திணை
குறித்த நூல்


புணர்தலும்
புணர்தல் நிமித்தமும்
குறிஞ்சித்திணை


அதாவது


தலைவனும்
தலைவியும்
களவுக் காதலில்
கூடி மகிழும்
ஒழுக்கத்தைக்
கூறுவது

குறிஞ்சித்திணை


களவியலின்
ஒரு துறை
அறத்தொடு நிற்றல்


அறத்தொடு நிற்றல்
என்பது

தலைமக்களது
களவொழுக்கத்தைப்
பெற்றோர்
அறியுமாறு

அகமாந்தர்கள்
(தலைவி, தோழி,
செவிலி, நற்றாய்)
கூறுவது


விளங்கக்கூறின்


தலைமக்களின்
வாழ்வை
அறவழியில்
நிலைப்படுத்த
விரும்பும்
அகமாந்தர்கள்

தலைவனும்
தலைவியும்
பிறர் அறியாமல்
காதல் கொண்ட
உண்மையை

உரியவர்க்கு
உரியவாறு
எடுத்துரைப்பது
அறத்தொடு
நிற்றலாம்.


அவ்வகையில்
இது
(குறிஞ்சிப்பாட்டு)

தோழி
செவிலித்தாய்க்குக்
கூறும்
கூற்றாக அமைந்தது


இந்நூலின்
(குறிஞ்சிப்பாட்டு
நூலின்)


வேறு பெயர்கள்

பெருங்காஞ்சி
களவியல் பாட்டு


இந்நூலை
(குறிஞ்சிப்பாட்டு நூலை)


முதலில்
பதிப்பித்தவர்

தமிழ்த் தாத்தா
டாக்டர் உ.வே. சாமிநாதையர்


-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கியம் பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள் பத்துப்பாட்டு - குறிஞ்சிப்பாட்டு

Tamil Literature Pathinenmelkanakku Noolgal Paththupaattu (Ten Idylls) - Kurinjipaattu



No comments:

Post a Comment