Wednesday, December 25, 2019

29) சங்கம் மருவிய கால இலக்கியம்


பாவலரொடு
காவலரும்
கைகோர்த்து
கவிபுனைந்து

கன்னித்தமிழ்
வளர்த்த காலம்
சங்க காலம்


அக்காலத்தில்தான்

பழங்காலத்தில்
தமிழ் மொழியில்
தோன்றி வளர்ந்த
இலக்கியங்களில்

அழிந்து
மறைந்தவை
போக
எஞ்சியவை
காக்கப்பட்டு

புலவர்களாலும்
புரவலர்களாலும்
தொகுக்கப்பட்டு

சங்க இலக்கியம்
என்ற
பெயரால்
குறிக்கப்பட்டது


சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
அப்பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு


இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)


அதிக அடிகளைக்
கொண்டு
அகவல் முதலியவற்றால்
ஆகிவரும்
பாக்களின் தொகுதி

மேற்கணக்கு


விளங்கக்கூறின்


1) நற்றிணை (Nattrinai)
2) குறுந்தொகை (Kurunthogai)
3) ஐங்குறுநூறு (Aingkurunuru)
4) பதிற்றுப்பத்து (Pathitrupaththu)
5) பரிபாடல் (Paripaadal)
6) கலித்தொகை (Kaliththogai)
7) அகநானூறு (Aganaanuru)
8) புறநானூறு (Puranaanuru)

என எட்டுத்
தொகுதிகளாகத்
தொகுக்கப்பட்ட
எட்டு நூல்கள்

எட்டுத்தொகை
என்றும்


 1) திருமுருகாற்றுப்படை (Thirumurugaatrupadai)
 2) பொருநராற்றுப்படை (Porunaraatrupadai)
 3) சிறுபாணாற்றுப்படை (Sirupaanaatrupadai)
 4) பெரும்பாணாற்றுப்படை (Perumpaanaatrupadai)
 5) முல்லைப்பாட்டு (Mullaipaattu)
 6) மதுரைக்காஞ்சி (Maduraikaanchi)
 7) நெடுநல்வாடை (Nedunalvaadai)
 8) குறிஞ்சிப்பாட்டு (Kurinjipaattu)
 9) பட்டினப்பாலை (Pattinappaalai)
10) மலைபடுகடாம் (Malaipadukadaam)

எனப் பத்து
பெரிய பாடல்கள்

பத்துப்பாட்டு
என்றும்
பெயர் பெற்றன


இதனைப்
போன்றே


தமிழ்
இலக்கிய வரலாற்றில்

சங்க காலத்தை
அடுத்து வந்த
காலம்

சங்கம் மருவிய காலம்


அதாவது


இருண்ட காலம்
எனக்
குறிப்பிடப்படும்

அது
(சங்கம் மருவிய காலம்)


களப்பிரர்கள்
ஆட்சி செய்த
காலம்

தமிழ் நாட்டின்
புறச்சமயங்களான
சமணமும்
பௌத்தமும்
மேலோங்கி இருந்த
காலம்


அக்காலத்தில்
தோன்றிய
இலக்கியங்கள்தான்

சங்கம் மருவிய கால
இலக்கியம்
என்ற
பெயரால்
குறிக்கப்பட்டது


சங்கம் மருவிய
காலத்தில்
இயற்றப்பட்ட
பதினெட்டு (18)
நூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கு
நூல்கள்

என
வழங்கப்படுகின்றன


குறைந்த அடிகளைக்
கொண்டு
வெண்பா யாப்பில்
அமைந்த
பாக்களின் தொகுதி

கீழ்க்கணக்கு


அவைகள்
முறையே


1)   நாலடியார் (Naaladiyaar)
2)  நான்மணிக்கடிகை (Naanmanikkadigai)
3)   இன்னா நாற்பது (Innaa Naarpathu)
4)  இனியவை நாற்பது (Iniyavai Naarpathu)
5)  கார் நாற்பது (Kaar Naarpathu)
6)  களவழி நாற்பது (Kalavazhi Naarpathu)
7)  ஐந்திணை ஐம்பது (Ainthinai Aimpathu)
8)   ஐந்திணை எழுபது (Ainthinai Ezhupathu)
9)   திணைமொழி ஐம்பது (Thinaimozhi Aimpathu)
10) திணைமாலை நூற்று ஐம்பது (Thinaimaalai Nootru Aimpathu)
11)  திருக்குறள் (Thirukkural)
12) திரிகடுகம் (Thirikadugam)
13) ஆசாரக்கோவை (Aacharakkovai)
14) பழமொழி (Pazhamozhi)
15) சிறுபஞ்சமூலம் (Sirupanchamoolam)
16) முதுமொழிக்காஞ்சி (Muthumozhikaanchi)
17) ஏலாதி (Yelathi)
18) கைந்நிலை (Kainnilai)


பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களைப்
பட்டியலிடும்
ஒரு வெண்பா


நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூல
மின்னிலைய காஞ்சியோ டேலாதி யென்பதூஉங்
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு.


நாலடி நான்மணி நானாற்ப துஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூல
ம்இன்னிலைய காஞ்சியோ டுஏலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு.


இவ்வெண்பாவில்
ஒரு
பாடவேறுபாட்டைப்
புகுத்தி

கைந்நிலையின்
இடத்தில்
இன்னிலை
என்ற

நீதி நூலை
வைத்து
எண்ணுவாரும்
உளர்


எனினும்


இந்தப்
பாடலில்

இனிய
நிலையை உடைய
காஞ்சி

என்று
அடைமொழியாகக்
கொள்ளப்பட்டு

கைந்நிலையே
பெரும்பாலோருக்கும்
உடன்பாடானது


அடிநிமிர் வில்லாச் செய்யுட் டொகுதி
யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வகை
திறம்பட வருவது கீழ்க்கணக் காகும்

அடிநிமிர் வுஇல்லாச் செய்யுள் தொகுதி
அறம்பொரு ள்இன்ப ம்அடுக்கி அவ்வகை
திறம்பட வருவது கீழ்க்கணக் குஆகும்

என்பது

பன்னிரு பாட்டியல்
சூத்திரத்தால்

நாம்
அறிந்திடும்

கீழ்க்கணக்கின்
இலக்கணம்


அஃதாவது


மிக்க அடிகளைக்
கொள்ளாது
சில அடிகளால்
ஆகிய
செய்யுள்களின்
தொகுதியால்

அறம்
பொருள்
இன்பம்

ஆகியவற்றில்
ஒன்றையோ
பலவற்றையோ

உணர்த்தி
வருவன

கீழ்க்கணக்கு
நூல்களாம்


நீதி நூல்கள்
அற நூல்கள்
இருண்ட கால இலக்கியங்கள்

என்றும்
அழைக்கப்பெறும்

இதில்
(பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களில்)
இடம்பெறும்
பாடல்கள்
அனைத்தும்

வெண்பா
யாப்பில்
அமைந்தவை


இவற்றுள்
(பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள்)


அறம்/நீதி சார்ந்த
நூல்கள்

நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
முப்பால் (திருக்குறள்)
திரிகடுகம்
ஆசாரக்கோவை
பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்
முதுமொழிக்காஞ்சி
ஏலாதி


அகம் சார்ந்த
நூல்கள்

கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமொழி ஐம்பது
திணைமாலை நூற்றைம்பது
கைந்நிலை


புறம் சார்ந்த
நூல்

களவழி நாற்பது


மேலும்


பதினெண்கீழ்க்கணக்கு
நீதி நூல்களுள்

பெரியது - திருக்குறள்
சிறியது - இன்னா நாற்பது


பதினெண்கீழ்க்கணக்கு
அக நூல்களுள்

பெரியது - திணைமாலை நூற்றைம்பது
சிறியது - கார் நாற்பது


பதினெண்கீழ்க்கணக்கில்
இரட்டை
அற நூல்கள்
என்று குறிப்பிடப்படுவது

இன்னா நாற்பது
இனியவை நாற்பது


பதினெண்கீழ்க்கணக்கில்
மருந்துப் பெயரில்
அமைந்த நூல்கள்

திரிகடுகம்
சிறுபஞ்சமூலம்
ஏலாதி


பதினெண்கீழ்க்கணக்கில்
ஒழுக்கம் பற்றிக்
கூறும் நூல்

ஆசாரக்கோவை


  
-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கியம் சங்கம் மருவிய கால இலக்கியம்
(பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்)

Tamil Literature Sangam Maruviya Kaala Ilakkiyam
(Pathinen Keezhkanakku Noolgal)



No comments:

Post a Comment