Wednesday, December 25, 2019

28) மலைபடுகடாம்


சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு


இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)


 1) திருமுருகாற்றுப்படை (Thirumurugaatrupadai)
 2) பொருநராற்றுப்படை (Porunaraatrupadai)
 3) சிறுபாணாற்றுப்படை (Sirupaanaatrupadai)
 4) பெரும்பாணாற்றுப்படை (Perumpaanaatrupadai)
 5) முல்லைப்பாட்டு (Mullaipaattu)
 6) மதுரைக்காஞ்சி (Maduraikaanchi)
 7) நெடுநல்வாடை (Nedunalvaadai)
 8) குறிஞ்சிப்பாட்டு (Kurinjipaattu)
 9) பட்டினப்பாலை (Pattinappaalai)
10) மலைபடுகடாம் (Malaipadukadaam)

என
நீண்ட நெடும்
பாடல்களாக
அமைந்த
பத்துப் பாடல்களின்
தொகுப்பு

பத்துப்பாட்டு
(தொடர் நிலைச் செய்யுள்)


இங்கு


பத்துப்பாட்டு
நூல்களில் ஒன்றான

மலைபடுகடாம்
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து

என

பத்துப்பாட்டு
நூல்களுள்
பத்தாவதாக
இடம்பெறுவது

பண்டைய
இசைக்கருவிகள்
குறித்து
மிகுதியாக கூறுவது

சிவபெருமானை
காரி உண்டி கடவுள்
(நஞ்சு உண்ட சிவன்)
என்று
குறிப்பிடும் நூல்

ஆற்றுப்படை
நூல்களுள்
மிகவும் பெரியது

கூத்தரைக்
களம் பெரு
கண்ணுளர்
என்று கூறுவது


மலைபடுகடாம்


பல்குன்றக் கோட்டத்துச்
செங்கண்மாத்துவேள்
நன்னன்சேய் நன்னனை
பாட்டுடைத்தலைவனாகக்
கொண்ட

இந்நூல்
(மலைபடுகடாம்)


(பாடல்
ஆசிரியர்)

இரணிய முட்டத்துப்
பெருங்குன்றூர்ப்
பெருங்கௌசிகனார்
என்பவரால்


(பாடல்களின்
அடியெல்லை)

583 அடிகள்
கொண்ட
தொடர் நிலைச்
செய்யுளாய்


(பாடல்களின்
பொருள்)

புறப்பொருள்
குறித்து


(பாடல்களின்
பா வகை)

ஆசிரியப்பாவால்
பாடப்பட்ட


(சிற்றிலக்கிய
வகை)

பொருளைப் பெற
ஆற்றுப்படுத்துகின்ற

ஒரு
ஆற்றுப்படை நூல்


இங்கு


ஆற்றுப்படை
என்பதன் பொருள்
வழிப்படுத்தல்
அல்லது
வழிகாட்டுதல்


அதாவது


பரிசு பெற்ற
ஒருவர்

தன்னைப்போல்
பரிசு பெறச்
செல்லும்
இன்னொருவரை

தன்னைப்போல்
பயனடைய
வேண்டி

தான்
பரிசு பெற்ற
வள்ளலிடமோ
அரசரிடமோ
வழிப்படுத்துவதே
ஆற்றுப்படை


அவ்வகையில்
இது
(மலைபடுகடாம்)


பரிசில் பெற்ற
கூத்தன் ஒருவன்
(நாடக கலைஞர்)
பரிசில் பெறக்கருதிய
கூத்தனைத்

தான் பரிசு பெற்ற
நன்னன்சேய் நன்னனிடம்
ஆற்றுப்படுத்துவதாக
அமைந்தது என்பதால்

கூத்தராற்றுப்படை
என்றும்
பெயர் பெற்றது


இங்கு


கூத்தர்
(கூத்து ஆடுபவர் கூத்தர்)
என்பது
ஆடுகளம் அமைத்து
ஆடுபவரைக்
(நாடகக் கலைஞரைக்)
குறிப்பிடுகின்றது


மேலும்


இது
(மலைபடுகடாம்)


மலைக்கு
யானையை உவமித்து
அதனிடத்தே
பிறந்த
பல்வகையான
ஓசையைக்
கடாம் (மதம்) எனச்
சிறப்பித்துப்
பாராட்டியிருத்தலால்
மலைபடுகடாம்
எனப்
பெயர்பெற்றது
என்பர்


இதில்
(மலைபடுகடாமில்)
குறிப்படப்படும்


பண்டைய கால
இசைக்கருவிகள்

 1) முழவு
 2) ஆகுளி
 3) பாண்டில்
 4) கோட்டு
 5) தும்பு
 6) குழல்
 7) அரி
 8) தட்டை
 9) எல்லரி
10) பதலை



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கியம் பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள் பத்துப்பாட்டு - மலைபடுகடாம்

Tamil Literature Pathinenmelkanakku Noolgal Paththupaattu (Ten Idylls) Malaipadukadaam



No comments:

Post a Comment