Wednesday, December 25, 2019

27) பட்டினப்பாலை


சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு


இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)


 1) திருமுருகாற்றுப்படை (Thirumurugaatrupadai)
 2) பொருநராற்றுப்படை (Porunaraatrupadai)
 3) சிறுபாணாற்றுப்படை (Sirupaanaatrupadai)
 4) பெரும்பாணாற்றுப்படை (Perumpaanaatrupadai)
 5) முல்லைப்பாட்டு (Mullaipaattu)
 6) மதுரைக்காஞ்சி (Maduraikaanchi)
 7) நெடுநல்வாடை (Nedunalvaadai)
 8) குறிஞ்சிப்பாட்டு (Kurinjipaattu)
 9) பட்டினப்பாலை (Pattinappaalai)
10) மலைபடுகடாம் (Malaipadukadaam)

என
நீண்ட நெடும்
பாடல்களாக
அமைந்த
பத்துப் பாடல்களின்
தொகுப்பு

பத்துப்பாட்டு
(தொடர் நிலைச் செய்யுள்)


இங்கு


பத்துப்பாட்டு
நூல்களில் ஒன்றான
பட்டினப்பாலை
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து

என

பத்துப்பாட்டு
நூல்களுள்
ஒன்பதாவதாகக்
குறிப்பிடப்படுவது

காவிரியின் பெருமை
மருதநிலத்தின் வளமை
காவிரிப்பூம்பட்டினத்தின்
செல்வச் செழிப்பு
ஆகியவற்றை
விளக்கிக்கூறுவது

கரிகால்
பெருவளத்தானின்
வீரச்செயல்களும்
அவன்
உறையூரை
வளப்படுத்தின
வரலாறும்
இடம்பெறுவது

காவிரிப்பூம்பட்டினத்தைப்
பற்றிய
வரலாற்றுக் களஞ்சியம்
என்று
அழைக்கப்படுவது

பட்டினப்பாலை


பட்டினத்தின்
(காவிரிப்பூம்பட்டினத்தின்)
சிறப்பைக் கூறும்
பாலைத்திணை
செய்யுள் என்பதால்

பட்டினப்பாலை
எனப் பெயர்பெற்ற

இந்நூல்
(பட்டினப்பாலை நூல்)


சோழன்
கரிகால் பெருவளத்தானைப்
(திருமாவளவன்)
பாட்டுடைத் தலைவனாகக்
கொண்டு


(பாடல்
ஆசிரியர்)

கடியலூர்
உருத்திரங்கண்ணனார்
என்பவரால்


(பாடல்களின்
அடியெல்லை)

301 அடிகள்
கொண்ட
தொடர் நிலைச்
செய்யுளாய்


(பாடல்களின்
பொருள்)

அகப்பொருள்
குறித்து


(பாடல்களின்
பா வகை)

இடையிடையே
வஞ்சிப்பா அடிகள்
விரவி வர
ஆசிரியப்பாவால்
பாடப்பட்ட


(பாடலின்
திணை)

பாலைத் திணை
குறித்த நூல்


பிரிதலும்
பிரிதல் நிமித்தமும்
பாலைத்திணை


இப்பாடல்
(பட்டினப்பாலை)


தலைவியைப்
பிரிந்து
வினைமேற்
செல்ல நினைத்த
தலைவன்

தன்
மனைவியைப்
பிரிய
மனமின்றி

தன்
நெஞ்சத்திற்குக்
காரணத்தைக்
கூறுவதாயும்

பிரிதலைத்
தவிர்ப்பதாயும்
அமைந்தது


அகப்பொருள்
இதனை
செலவழுங்குதல்
என்று கூறும்


கரிகால்
பெருவளத்தான்

பட்டினப்பாலை
பாடிய
உருத்திரங்கண்ணனாருக்கு

பதினாறு நூறாயிரம்
பொன் பரிசளித்தான்

என்று
கலிங்கத்துப்பரணி
கூறுகிறது


இந்நூல்
(பட்டினப்பாலை)

அரங்கேற்றப்பட்ட
இடம்

பதினாறு கால்
மண்டபம்


இந்நூலின்
(பட்டினப்பாலை
நூலின்)


வேறு பெயர்கள்

பாலைபாட்டு
வஞ்சி நெடும் பாட்டு
(இப்பெயர் இருந்தமையைத்
தமிழ் விடும் தூது குறிப்பிடுகிறது)



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கியம் பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள் பத்துப்பாட்டு - பட்டினப்பாலை

Tamil Literature Pathinenmelkanakku Noolgal Paththupaattu (Ten Idylls) Pattinappaalai



No comments:

Post a Comment