சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)
1) திருமுருகாற்றுப்படை (Thirumurugaatrupadai)
2) பொருநராற்றுப்படை (Porunaraatrupadai)
3) சிறுபாணாற்றுப்படை (Sirupaanaatrupadai)
4) பெரும்பாணாற்றுப்படை (Perumpaanaatrupadai)
5) முல்லைப்பாட்டு (Mullaipaattu)
6) மதுரைக்காஞ்சி (Maduraikaanchi)
7) நெடுநல்வாடை (Nedunalvaadai)
8) குறிஞ்சிப்பாட்டு (Kurinjipaattu)
9) பட்டினப்பாலை (Pattinappaalai)
10) மலைபடுகடாம்
(Malaipadukadaam)
என
நீண்ட நெடும்
பாடல்களாக
அமைந்த
பத்துப் பாடல்களின்
தொகுப்பு
பத்துப்பாட்டு
(தொடர்
நிலைச் செய்யுள்)
இங்கு
பத்துப்பாட்டு
நூல்களில் ஒன்றான
பொருநராற்றுப்படை
குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
முருகு
பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு
வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு
நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை
கடாத்தொடும் பத்து
முருகு
பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு
வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு
நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை
கடாத்தொடும் பத்து
என
பத்துப்பாட்டு
நூல்களுள்
இரண்டாவதாகச்
சொல்லப்படுவது
ஆற்றுப்படை
நூல்களுள்
அடி அளவால்
மிகச்சிறியது
பொருநன்
கையாண்ட
யாழ் குறித்த
வருணனை
இடம்பெறுவது
உள்ளக்குறிப்பு
புறத்தே வெளிப்பட
ஆடும் விறலியின்
மேனியழகை
அழகுற விளக்குவது
கரிகால் வளவனின்
வெண்ணிப் பறந்தலை
வெற்றி
குறித்துக்
கூறுவது
பொருநராற்றுப்படை
(பொருநர் + ஆற்றுப்படை =
பொருநராற்றுப்படை)
சோழன் கரிகால்
பெருவளத்தானைப்
பாட்டுடைத்தலைவனாகக்
கொண்ட
இந்நூல்
(பொருநராற்றுப்படை)
(பாடல்
ஆசிரியர்)
முடத்தாமக்
கண்ணியார்
என்பவரால்
(பாடல்களின்
அடியெல்லை)
248 அடிகள்
கொண்ட
தொடர்
நிலைச்
செய்யுளாய்
(பாடல்களின்
பொருள்)
புறப்பொருள்
குறித்து
(பாடல்களின்
பா வகை)
ஆசிரியப்பாவால்
பாடப்பட்ட
(இடையிடையே
வஞ்சியடிகள்
விரவி
வருவது)
(சிற்றிலக்கிய
வகை)
பொருளைப் பெற
ஆற்றுப்படுத்துகின்ற
ஒரு
ஆற்றுப்படை நூல்
இங்கு
ஆற்றுப்படை
என்பதன்
பொருள்
வழிப்படுத்தல்
அல்லது
வழிகாட்டுதல்
அதாவது
பரிசு பெற்ற
ஒருவர்
தன்னைப்போல்
பரிசு பெறச்
செல்லும்
இன்னொருவரை
தன்னைப்போல்
பயனடைய
வேண்டி
தான்
பரிசு பெற்ற
வள்ளலிடமோ
அரசரிடமோ
வழிப்படுத்துவதே
ஆற்றுப்படை
அவ்வகையில்
இது
(பொருநராற்றுப்படை)
பரிசில்
பெற்ற
பொருநன்
ஒருவன்
பரிசில்
பெறக்கருதிய
பொருநனைத்
தான் பரிசு பெற்ற
கரிகால்
சோழனிடம்
ஆற்றுப்படுத்துவதாக
அமைந்தது
இங்கு
பொருநர்
என்பது
பறைகளை முழக்கிப்
பாடியாடும்
கலைஞரைக்
குறிப்பிடுகின்றது
மேலும்
இந்நூல்
(பொருநராற்றுப்படை)
பரிசில் பெறச்
செல்வோரால்
பெயர் பெற்றது
இந்நூலை
(பொருநராற்றுப்படை
நூலை)
முதலில்
பதிப்பித்தவர்
வா. மகாதேவ முதலியார்
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள் – பத்துப்பாட்டு - பொருநராற்றுப்படை
No comments:
Post a Comment