காலம் என்னும்
ஆழ்கடலில்
நீந்துகின்றவனுக்கு
அறிவு என்னும்
துறைமுகத்தை அடையக்
கலங்கரை விளக்கமாக
அமைந்துள்ளவை
சிறந்தப்
புத்தகங்கள் என்றவர்
- கவி தாகூர்
புத்தகங்களுடன்
ஒருவன் வளராவிட்டால்
அது
அவனுக்குப்
பேரிழப்பாகும்
என்று கூறியவர்
- ஆப்ரகாம் லிங்கன்
ஆயிரம் புத்தகங்களை
வாசித்த
ஒருவன் இருந்தால்
அவனைக் காட்டுங்கள்
அவனே
எனது வழிகாட்டி
என்று சொன்னவர்
- ஜூலியஸ் சீசர்
உலக வரைபடத்திலுள்ள
மூலைமுடுக்குகளுக்கு
எல்லாம்
போக விரும்புகிறாயா
அப்படியானால்
ஒரு நூலகத்திற்குச்
செல்
என்று கூறியவர்
- டெஸ்கார்ட்ஸ்
பயங்கரமான
போராட்ட ஆயுதம்
எது
எனக் கேட்டபோது
துப்பாக்கியிலிருந்து
வெளியேறும்
தோட்டாவைவிட
வீரியமான ஆயுதம்
புத்தகம்தான்
என்று சொன்னவர்
- மார்டின் லூதர்கிங்
போதும் என்று
நொந்துப்போய்
புதுவாழ்வைத்
தேடுகிறீர்களா
ஒரு புத்தகத்தை
வாசிக்கத் தொடங்கு
என்று சொன்னவர்
- இங்கர்சால்
காலமெனும் பெருங்கடலில்
கட்டிய
கலங்கரை விளக்கங்கள்
புத்தகங்கள்
என்று கூறியவர்
- எட்வின் பி. விப்பில்
உலகில்
சாகாவரம் பெற்றப்
பொருள்கள்
புத்தகங்களே என்றவர்
- கதே
எந்த ஊருக்கு போனாலும்
அந்த ஊரின்
படித்த இளைஞர்களிடம்
நூலகம்
எங்கே இருக்கிறது
என்று கேளுங்கள்
அந்த
ஊரின் இலட்சணத்தை
எடைபோட்டுவிடலாம்
என்று கூறியவர்
-
டாக்டர்
இராதாகிருஷ்ணன்
புத்தகம் இல்லாத அறை
உயிரில்லாத
உடலுக்கு ஒப்பானது
என்று கூறியவர்
- சிசரோ
ஒரு குழந்தைக்கு
நீங்கள் வாங்கித் தரும்
மிகச் சிறந்தப் பரிசு
ஒரு புத்தகம்தான்
என்று கூறியவர்
- வின்ஸ்டன் சர்ச்சில்
அறிவு ஆனந்தம்
பக்தி பயன்
ஆகியவற்றை
நல்கக் கூடியவை
புத்தகங்கள் என்றவர்
- ஸர். ஜான் டென்ஹாம்
புத்தகங்களைப்
போன்ற
சிறந்தக் கருவூலம்
மனிதனுக்கு
வேறெதுவும்
இருக்கமுடியாது என்றவர்
- அறிஞர் ரஸ்கின்
புத்தகங்கள்
மனிதச் சமூகத்திற்காகப்
பேரறிஞர்கள்
விட்டுச் சென்றுள்ள
பரம்பரைச் சொத்தாகும்
என்று கூறியவர்
- அடிஸன்
ஒரு நூலகம்
திறக்கப்படும்போது
ஒரு சிறைச்சாலை
மூடப்படுகிறது
என்று கூறிய பேரறிஞர்
- விக்டர் ஹியுகோ
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கியம் – புத்தகங்கள் பற்றி பேரறிஞர்கள்
No comments:
Post a Comment