Wednesday, December 25, 2019

9) எட்டுத்தொகை


பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள்
எட்டுத்தொகை

Pathinenmelkanakku Noolgal
Ettuththogai (Eight Anthologies)

பாவலரொடு
காவலரும்
கைகோர்த்து
கவிபுனைந்து

கன்னித்தமிழ்
வளர்த்த காலம்
சங்க காலம்


அக்காலத்தில்தான்


பழங்காலத்தில்
தமிழ் மொழியில்
தோன்றி வளர்ந்த
இலக்கியங்களில்

அழிந்து
மறைந்தவை
போக
எஞ்சியவை
காக்கப்பட்டு

புலவர்களாலும்
புரவலர்களாலும்
தொகுக்கப்பட்டு

சங்க இலக்கியம்
என்ற
பெயரால்
குறிக்கப்பட்டது


சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
அப்பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு


இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்


இங்கு


எட்டுத்தொகை
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


1) நற்றிணை (Nattrinai)
2) குறுந்தொகை (Kurunthogai)
3) ஐங்குறுநூறு (Aingkurunuuru)
4) பதிற்றுப்பத்து (Pathitrupaththu)
5) பரிபாடல் (Paripaadal)
6) கலித்தொகை (Kaliththogai)
7) அகநானூறு (Aganaanuuru)
8) புறநானூறு (Puranaanuuru)

என எட்டுத்
தொகுதிகளாகத்
தொகுக்கப்பட்ட
எட்டு நூல்கள்

எட்டுத்தொகை


தொகை
எண்பெருந்தொகை
எண்கோவை
என்றும்
அழைக்கப்பெறும்

இதில்
(எட்டுத்தொகையில்)

இடம்பெறும்
பாடல்கள்
ஒவ்வொன்றும்

பலரால்
பல்வேறு
காலகட்டங்களில்
பாடப்பட்டு

பொருளினாலும்
செய்யுள் வகையினாலும்
அடி அளவினாலும்
ஒரு சேரத்
தொகுக்கப்பட்டது

இதில்
(எட்டுத்தொகையில்)

இடம்பெறும்
பாடல்கள்

3 அடிகள்
சிற்றெல்லையும்
140 அடிகள்
பேரெல்லையும்
பெற்றுள்:ளன


பாடியவர்களில்
அரசர்களும்
பெண்பாற் 
புலவர்களும்
உண்டு

ஆசிரியர் பெயர்
தெரியாப் பாடல்களும்
இடம்பெற்றுள்ளன


இவற்றுள்
(எட்டுத்தொகை
நூல்களுள்)


அகப்பொருள்
பற்றிய
நூல்கள்

நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
கலித்தொகை
அகநானூறு


புறப்பொருள்
பற்றிய
நூல்கள்

பதிற்றுப்பத்து
புறநானூறு


அகமும் புறமும்
கலந்தமைந்த நூல்

பரிபாடல்


ஆசிரியப்பா
செய்யுள் வகையால்
ஆனது
(சில சமயம்
வஞ்சிப்பாவும்
வரப்பெற்றவை)

நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
அகநானூறு
புறநானூறு


கலிப்பா
செய்யுள் வகையால்
ஆனது

கலித்தொகை


பரிபாட்டு
செய்யுள் வகையால்
ஆனது

பரிபாடல்


(எட்டுத்தொகை
நூல்களுள்)
முதன்முதலாக
தொகுக்கப்பட்ட
தொகை நூலாக
கருதப்படுவது

குறுந்தொகை


காலத்தால்
முந்தியது

புறநானூறு


காலத்தால்
பிந்தியது

பரிபாடல்
கலித்தொகை


எட்டுத்தொகை
நூல்களைப்
பட்டியலிடும்
ஒரு வெண்பா


நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்தும் கலியே யகம்புறமென்
றித்திறத்த வெட்டுத் தொகை


நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ
றுஒத்த பதிற்றுப்பத் துஓங்கு பரிபாடல்
கற்றறிந்தா ர்ஏத்தும் கலியே அகம்புறம்என்
றுஇத்திறத்த எட்டுத் தொகை



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கியம்
Guru Vishnu – Tamil Literature




No comments:

Post a Comment