சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)
1) திருமுருகாற்றுப்படை (Thirumurugaatrupadai)
2) பொருநராற்றுப்படை (Porunaraatrupadai)
3) சிறுபாணாற்றுப்படை (Sirupaanaatrupadai)
4) பெரும்பாணாற்றுப்படை (Perumpaanaatrupadai)
5) முல்லைப்பாட்டு (Mullaipaattu)
6) மதுரைக்காஞ்சி (Maduraikaanchi)
7) நெடுநல்வாடை (Nedunalvaadai)
8) குறிஞ்சிப்பாட்டு (Kurinjipaattu)
9) பட்டினப்பாலை (Pattinappaalai)
10) மலைபடுகடாம்
(Malaipadukadaam)
என
நீண்ட நெடும்
பாடல்களாக
அமைந்த
பத்துப் பாடல்களின்
தொகுப்பு
பத்துப்பாட்டு
(தொடர்
நிலைச் செய்யுள்)
இங்கு
பத்துப்பாட்டு
நூல்களில் ஒன்றான
மதுரைக்காஞ்சி
குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
முருகு
பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு
வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு
நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை
கடாத்தொடும் பத்து
முருகு
பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு
வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு
நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை
கடாத்தொடும் பத்து
என
பத்துப்பாட்டு
நூல்களுள்
ஆறாவதாகக்
குறிப்பிடப்படுவது
போரின்
கொடுமையையும்
அதனால்
நாடு
பாழாவதையும்
விளக்கிக் கூறுவது
பாண்டிய நாட்டின்
தலைநகரான
மதுரையின்
அழகையும் வளத்தையும்
விரிவாய் விளக்குவது
தமிழறிஞர் முனைவர்
ச.வே. சுப்பிரமணியன்
அவர்களால்
மாநகர்ப்பாட்டு என
அழைக்கப்படுவது
மதுரையில்
நாளங்காடியும்
(பகல் நேரக் கடை)
அல்லங்காடியும்
(இரவு நேரக் கடை)
செயல்பட்டதை
எடுத்துரைப்பது
பத்துப்பாட்டு
நூல்களுள்
அடி அளவால்
மிகவும் நீண்டது
மதுரையில்
நடைப்பெற்ற
ஆறு விழாக்கள்
குறித்து கூறுவது
பாண்டியனின்
முன்னோர் குறித்த
செய்திகள்
அதிக அளவில்
இடம்பெறுவது
மதுரைக்காஞ்சி
தலையாலங்கானத்து
செருவென்ற பாண்டியன்
நெடுஞ்செழியனைப்
பாட்டுடைத்தலைவனாகக்
கொண்ட
இந்நூல்
(மதுரைக்காஞ்சி)
(பாடல்
ஆசிரியர்)
நல்லிசைப் புலவர்களில்
ஒருவரான
மாங்குடி மருதனார்
என்பவரால்
(பாடல்களின்
அடியெல்லை)
782 அடிகள்
கொண்ட
தொடர் நிலைச்
செய்யுளாய்
(பாடல்களின்
பொருள்)
புறப்பொருள்
குறித்து
(பாடல்களின்
பா வகை)
(வஞ்சியடிகள் விரவிய)
ஆசிரியப்பாவால்
பாடப்பட்ட
(பாடலின்
திணை)
காஞ்சித்
திணைக்குரிய
நூல்
தொல்காப்பியம்
குறிப்பிடும்
காஞ்சித்திணை
நிலையாமை
பற்றியது
புறப்பொருள்
வெண்பாமாலை
குறிப்பிடும்
காஞ்சித்திணை
போர்
பற்றியது
இந்நூல்
(மதுரைக்காஞ்சி)
தொல்காப்பியம்
காஞ்சித்திணையாய்க்
குறிப்பிடும்
வாழ்க்கையின்
நிலையாமையைக்
கூறி
நல்வழியை
வற்புறுத்துவதாய்
அமைந்தது
இதன்
(மதுரைக்காஞ்சி
நூலின்)
வேறு பெயர்கள்
காஞ்சிப்பாட்டு
கூடல் தமிழ்
மாநகர்ப்பாட்டு
இதில்
(மதுரைகாஞ்சியில்)
குறிப்படப்படும்
மதுரையில் நடைபெற்ற
ஆறு விழாக்கள்
1) திருபரங்குன்ற விழா
2) மதுரை கோவில் விழா
3) அந்தி விழா
4) எழுநாள் விழா
5) திருவோண விழா
6) வேந்தனின் பிறந்த
நாள் விழா
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள் – பத்துப்பாட்டு - மதுரைக்காஞ்சி
No comments:
Post a Comment