Wednesday, December 25, 2019

15) கலித்தொகை


சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு


இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)


1) நற்றிணை (Nattrinai)
2) குறுந்தொகை (Kurunthogai)
3) ஐங்குறுநூறு (Aingkurunuuru)
4) பதிற்றுப்பத்து (Pathitrupaththu)
5) பரிபாடல் (Paripaadal)
6) கலித்தொகை (Kaliththogai)
7) அகநானூறு (Aganaanuuru)
8) புறநானூறு (Puranaanuuru)

என எட்டுத்
தொகுதிகளாகத்
தொகுக்கப்பட்ட
எட்டு நூல்கள்

எட்டுத்தொகை


இங்கு


எட்டுத்தொகை
நூல்களில் ஒன்றான
கலித்தொகை
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்தும் கலியே யகம்புறமென்
றித்திறத்த வெட்டுத் தொகை

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ
றுஒத்த பதிற்றுப்பத் துஓங்கு பரிபாடல்
கற்றறிந்தா ர்ஏத்தும் கலியே அகம்புறம்என்
றுஇத்திறத்த எட்டுத் தொகை

என

எட்டுத்தொகை
நூல்களுள்
ஆறாவதாகக்
குறிப்பிடப்படுவது

தொகை நூல்களுள்
பாலைத்திணையை
முதலாகக் கொண்டு
அமைந்திருப்பது

சங்க நூல்களுள்
பா வகையால்
பெயர் பெற்றது

கற்றறிந்தார் ஏத்தும் கலி
கல்விவலார் கண்ட கலி
என
அறிஞர்களால்
பாராட்டப்படுவது

தொகை நூல்களுள்
முதன்முதலாகப்
பதிப்பிக்கப்பெற்றது

பாண்டியர்களைப்
பற்றிய குறிப்புகள்
மிகுந்து
காணப்படுவது

காமகிழத்தி
பேசுவதாக
அமைந்த
ஒரே சங்கநூல்

தமிழர்களின்
மரபுவழி
விளையாட்டான
ஏறு தழுவுதல்
குறித்து கூறுவது

(மஞ்சு விரட்டுதல்,
ஜல்லிக்கட்டு)

சங்க கால
வழக்கங்களில்
ஒன்றான
மடலேறுதல்
குறித்து கூறுவது

(மடலூர்தல்
மடல் ஊர்தல்)

பெருந்திணை
கைக்கிளை
பாடல்கள்
இடம்பெற்ற
ஒரே சங்க நூல்

புராணங்களிலும்
இதிகாசங்களிலும்
இடம்பெறும்
செய்திகளை
மிகுதியாகக் கூறுவது

பெண்கள்
பிறந்த வீட்டுக்கு
உரியவர் அல்லர்
என்னும்
சிந்தனையைக்
கூறுவது

இசையோடு
பாடுவதற்கேற்ற
துள்ளலோசை
கொண்டு
நாடகப்பாங்கில்
அமையப்பெற்றது


கலித்தொகை


நான்கு வகை
பாக்களுள்
கலிப்பாவுக்கு
இலக்கியமாகத்
திகழ்ந்திடும்

இந்நூல்
(கலித்தொகை)


(பாடியவர்
எண்ணிக்கை)

ஐந்து (5)
புலவர்களால்


(பாடல்களின்
அடியெல்லை)

பதினொன்று (11) அடிச்
சிற்றெல்லையும்
எண்பது (80) அடிப்
பேரெல்லையும்
கொண்டு


(பாடல்களின்
பொருள்)

அகப்பொருள்
குறித்து


(பாடல்களின்
பா வகை)

கலிப்பாவால்
பாடப்பட்ட


(பாடல்கள்
எண்ணிக்கை)

நூற்றுநாற்பத்தொன்பது (149)
பாடல்கள் கொண்ட
தொகுப்பு

(கடவுள் வாழ்த்துடன்
நூற்றைம்பது (150)
பாடல்கள்)


புலவர்களையும்
அவர்கள் பாடிய
திணைகளையும்
விளக்கும்
ஒரு பழம்பாடல்


பெருங்கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி
மருதனிள நாகன் மருதம் அருஞ்சோழன்
நல்லுருத்தி ரன்முல்லை நல்லந் துவனெய்தல்
கல்விவலார் கண்ட கலி

பெருங்கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி
மருதன்இள நாகன் மருதம் அருஞ்சோழன்
நல்லுருத்தி ரன்முல்லை நல்லந் துவன்நெய்தல்
கல்விவலார் கண்ட கலி


அதாவது


பாலை (35)   - பெருங்கடுங்கோன்
குறிஞ்சி (29)  - கபிலர்
மருதம் (35)   - மருதன் இளநாகனார்
முல்லை (17)  - சோழன் நல்லுருத்திரன்
நெய்தல் (33) - நல்லந்துவனார்


இந்நூலைத்
(கலித்தொகை நூலைத்)


தொகுத்தவர்

நல்லந்துவனார்


தொகுப்பித்தவர்

யாரெனத்
தெரியவில்லை


இதில்
(கலித்தொகை நூலில்)
இடம்பெறும்


கடவுள் வாழ்த்து
பாடலில்
குறிப்பிடப்படும்
கடவுள்

சிவபெருமான்


இதன்
(கலித்தொகை நூலின்)


வேறு பெயர்கள்

கலி
குறுங்கலி
கற்றறிந்தார் ஏத்தும் கலி
கல்விவலார் கண்ட கலி
அகப்பாடல் இலக்கியம்


இந்நூலை
(கலித்தொகை நூலை)


முதலில்
பதிப்பித்தவர்

தமிழ்த்தந்தை
ராவ் பகதூர்
சி.வை. தாமோதரம் பிள்ளை



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கியம் பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள் எட்டுத்தொகை 06-கலித்தொகை

Tamil Literature Pathinenmelkanakku Noolgal Ettuththogai (Eight Anthologies) 06-Kaliththogai



No comments:

Post a Comment