Wednesday, December 25, 2019

30) நாலடியார்


தமிழ்
இலக்கிய வரலாற்றில்

சங்க காலத்தை
அடுத்து வந்த
காலம்

சங்கம் மருவிய காலம்


அதாவது


இருண்ட காலம்
எனக்
குறிப்பிடப்படும்

அது
(சங்கம் மருவிய காலம்)


களப்பிரர்கள்
ஆட்சி செய்த
காலம்

தமிழ் நாட்டின்
புறச்சமயங்களான
சமணமும்
பௌத்தமும்
மேலோங்கி இருந்த
காலம்


அக்காலத்தில்
தோன்றிய
இலக்கியங்கள்தான்

சங்கம் மருவிய கால
இலக்கியம்
என்ற
பெயரால்
குறிக்கப்பட்டது


சங்கம் மருவிய
காலத்தில்
இயற்றப்பட்ட
பதினெட்டு (18)
நூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கு
நூல்கள்

என
வழங்கப்படுகின்றன


குறைந்த அடிகளைக்
கொண்டு
வெண்பா யாப்பில்
அமைந்த
பாக்களின் தொகுதி

கீழ்க்கணக்கு


அவைகள்
முறையே


1)   நாலடியார் (Naaladiyaar)
2)  நான்மணிக்கடிகை (Naanmanikkadigai)
3)   இன்னா நாற்பது (Innaa Naarpathu)
4)  இனியவை நாற்பது (Iniyavai Naarpathu)
5)  கார் நாற்பது (Kaar Naarpathu)
6)  களவழி நாற்பது (Kalavazhi Naarpathu)
7)  ஐந்திணை ஐம்பது (Ainthinai Aimpathu)
8)   ஐந்திணை எழுபது (Ainthinai Ezhupathu)
9)   திணைமொழி ஐம்பது (Thinaimozhi Aimpathu)
10) திணைமாலை நூற்று ஐம்பது (Thinaimaalai Nootru Aimpathu)
11)  திருக்குறள் (Thirukkural)
12) திரிகடுகம் (Thirikadugam)
13) ஆசாரக்கோவை (Aacharakkovai)
14) பழமொழி (Pazhamozhi)
15) சிறுபஞ்சமூலம் (Sirupanchamoolam)
16) முதுமொழிக்காஞ்சி (Muthumozhikaanchi)
17) ஏலாதி (Yelathi)
18) கைந்நிலை (Kainnilai)


பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களைப்
பட்டியலிடும்
ஒரு வெண்பா


நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூல
மின்னிலைய காஞ்சியோ டேலாதி யென்பதூஉங்
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு.


நாலடி நான்மணி நானாற்ப துஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூல
ம்இன்னிலைய காஞ்சியோ டுஏலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு.


இங்கு


பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களில் ஒன்றான
நாலடியார்
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


திருக்குறளோடு
ஒப்பவைத்து
பாராட்டப்பெறும்
சிறப்புடையது

பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள் உள்ள
ஒரே
தொகை நூல்

முப்பெரும்
நீதி/அற நூல்களுள்
(திருக்குறள் நாலடியார்
பழமொழி நானூறு)
ஒன்றாய்த்
திகழ்வது

துறவறத்தையும்
நிலையாமையையும்
அதிகமாக
வலியுறுத்தி
பாடப்பட்டது

திருக்குறளைப்
போன்றே
வகை தொகை
கொண்டு
வடிவமைக்கப்பட்டது


நாலடியார்

(நாலடி + ஆர் = நாலடியார்)


இது
(நாலடியார்)

பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள்
அறம்/நீதி சார்ந்த நூல்


நாலடி கொண்ட
வெண்பாவால்
எழுதப்பட்டதால்
நாலடியார் எனப்
பெயர்பெற்ற

இந்நூல்
(நாலடியார்)


(பாடியவர்
எண்ணிக்கை)

சமண
முனிவர்கள்
பலரால்


(பாடல்களின்
அடியெல்லை)

நான்கு
அடிகளைக்
கொண்டு


(பாடல்களின்
பொருள்)

அறம் (13 அதிகாரங்கள்)
பொருள் (24 அதிகாரங்கள்)
இன்பம் (3 அதிகாரங்கள்)
குறித்து


(பாடல்களின்
பா வகை)

வெண்பாவால்
பாடப்பட்ட


(பாடல்கள்
எண்ணிக்கை)

நானூறு (400)
பாடல்கள் கொண்ட
தொகுப்பு

(கடவுள் வாழ்த்துடன்
நானூற்றொன்று (401)
பாடல்கள்)


இந்நூலைத்
(நாலடியார் நூலைத்)


தொகுத்தவர்

பதுமனார்


இதன்
(நாலடியார் நூலின்)


வேறு பெயர்கள்

நாலடி
நாலடி நானூறு
வேளாண் வேதம்
திருக்குறளின் விளக்கம்


இந்நூலின்
(நாலடியார் நூலின்)

அருமைபெருமைகளைக்
கூறும்
ஆன்றோர் மொழிகள்


”பாலும் நெய்யும் உடலுக்கு உறுதி
வேலும் வாளும் அடலுக்கு உறுதி
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி”

”பழகு தமிழ்ச் சொல்லருமை
நாலிரண்டில்”

”நாலடி இரண்டடி கற்றவ னிடத்து
வாயடி கையடி அடிக்காதே”


இங்கு

‘நால்’ எனப்படுவது
நாலடியார்

‘இரண்டு’ எனப்படுவது
திருக்குறள்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கியம் நாலடியார்
(பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்)

Tamil Literature Naaladiyaar
(Pathinen Keezhkanakku Noolgal)



No comments:

Post a Comment