Wednesday, December 25, 2019

12) ஐங்குறுநூறு


சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு


இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)


1) நற்றிணை (Nattrinai)
2) குறுந்தொகை (Kurunthogai)
3) ஐங்குறுநூறு (Aingkurunuuru)
4) பதிற்றுப்பத்து (Pathitrupaththu)
5) பரிபாடல் (Paripaadal)
6) கலித்தொகை (Kaliththogai)
7) அகநானூறு (Aganaanuuru)
8) புறநானூறு (Puranaanuuru)

என எட்டுத்
தொகுதிகளாகத்
தொகுக்கப்பட்ட
எட்டு நூல்கள்

எட்டுத்தொகை


இங்கு


எட்டுத்தொகை
நூல்களில் ஒன்றான
ஐங்குறுநூறு
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்தும் கலியே யகம்புறமென்
றித்திறத்த வெட்டுத் தொகை

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ
றுஒத்த பதிற்றுப்பத் துஓங்கு பரிபாடல்
கற்றறிந்தா ர்ஏத்தும் கலியே அகம்புறம்என்
றுஇத்திறத்த எட்டுத் தொகை

என

எட்டுத்தொகை
நூல்களுள்
மூன்றாவதாக
குறிப்பிடப்படுவது

தொகை நூல்களுள்
மிகுதியான
செய்யுள்களைப்
பெற்றிருப்பது

தொகை நூல்களுள்
மருதத்திணையை
முதலாகக் கொண்டு
அமைந்திருப்பது

தொகை நூல்களுள்
அடியளவால்
மிகவும் சிறிய
பாடல்களைக்
கொண்டிருப்பது


ஐங்குறுநூறு

(ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு)


குறுகிய அடிகளைக்
கொண்ட
ஐநூறு பாடல்களைக்
கொண்ட

இந்நூல்
(ஐங்குறுநூறு)


(பாடியவர்
எண்ணிக்கை)

ஐந்து (5)
புலவர்களால்


(பாடல்களின்
அடியெல்லை)

மூன்று (3) அடிச்
சிற்றெல்லையும்
ஆறு (6) அடிப்
பேரெல்லையும்
கொண்டு


(பாடல்களின்
பொருள்)

அகப்பொருள்
குறித்து


அதாவது


மருதம்
நெய்தல்
குறிஞ்சி
பாலை
முல்லை

என்ற
ஐந்து
அகப்பொருள் திணைகள்
(அன்பின் ஐந்திணை)
குறித்து

திணைக்கு
நூறு பாடல்கள்
என்ற
அடிப்படையில்


(பாடல்களின்
பா வகை)

ஆசிரியப்பாவால்
பாடப்பட்ட


(பாடல்கள்
எண்ணிக்கை)

ஐநூறு (500)
பாடல்கள் கொண்ட
தொகுப்பு

(கடவுள் வாழ்த்துடன்
ஐநூற்றொன்று (501)
பாடல்கள்)


புலவர்களையும்
அவர்கள் பாடிய
திணைகளையும்
விளக்கும்
ஒரு பழம்பாடல்


மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதும் குறிஞ்சி கபிலர் கருதிய
பாலையோ தலாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு

மருதம்ஓ ரம்போகி நெய்தல்அம் மூவன்
கருதும் குறிஞ்சி கபிலர் கருதிய
பாலைஓ தலாந்தை பனிமுல்லை பேயனே
நூலைஓ துஐங்குறு நூறு


அதாவது


மருதம்       - ஓரம்போகியார்
நெய்தல்     - அம்மூவனார்
குறிஞ்சி      - கபிலர்
பாலை      - ஓதலாந்தையார்
முல்லை      - பேயனார்


இந்நூலைத்
(ஐங்குறுநூறு நூலைத்)


தொகுத்தவர்

புலத்துறை முற்றிய
கூடலூர் கிழார்


தொகுப்பித்தவர்

யானைக்கட்சேய்
மாந்தரஞ்சேரல்
இரும்பொறை


இதில்
(ஐங்குறுநூறு நூலில்)
இடம்பெறும்


கடவுள் வாழ்த்து
பாடலைப்
பாடியவர்

பாரதம் பாடிய
பெருந்தேவனார்


கடவுள் வாழ்த்து
பாடலில்
குறிப்பிடப்படும்
கடவுள்

சிவபெருமான்


இந்நூலுக்கு
(ஐங்குறுநூறு நூலுக்கு)


முதலில்
உரை எழுதியவர்

ஔவை சு. துரைசாமிப் பிள்ளை


இந்நூலை
(ஐங்குறுநூறு நூலை)


முதலில்
பதிப்பித்தவர்

தமிழ்த் தாத்தா
டாக்டர் உ.வே. சாமிநாதையர்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கியம் பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள் எட்டுத்தொகை 03-ஐங்குறுநூறு

Tamil Literature Pathinenmelkanakku Noolgal Ettuththogai (Eight Anthologies) 03-Aingkurunuuru



No comments:

Post a Comment