தனிமைத் தீவில்
தள்ளப்பட்டால்
என்ன செய்வீர்கள்
என்று கேட்டபோது
புத்தகங்களுடன்
மகிழ்ச்சியாக
வாழ்ந்துவிட்டு வருவேன்
என்று பதிலளித்தவர்
- ஜவஹர்லால் நேரு
இங்கே
ஒரு புத்தகப் புழு
உறங்குகிறது என்று
என் கல்லறையில்
மறக்காமல் எழுதுங்கள்
என்று கூறியவர்
- பெட்ரண்ட் ரஸ்ல்
தான் தூக்கிலிடப்படும்
ஒரு நிமிடத்திற்கு
முன்பு
வரையிலும்
வாசித்துக்கொண்டே
இருந்தவர்
- பகத்சிங்
வேறு எந்தச்
சுதந்திரமும் வேண்டாம்
சிறையில்
புத்தக வாசிப்பை மட்டும்
அனுமதிக்க வேண்டும்
என்று கேட்டுக்கொண்டவர்
- நெல்சன் மண்டேலா
பிறந்த நாளுக்கு
என்ன வேண்டும் என
நாடு கேட்டபோது
புத்தகங்கள் வேண்டும்
என்று
தயங்காமல் கேட்டவர்
- லெனின்
மனிதனின்
மிகப் பெரிய
கண்டுபிடிப்பு எது
என்று
வினவப்பட்டபோது
சற்றும் யோசிக்காமல்
புத்தகம்
என்று பதிலளித்தவர்
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஒவ்வொரு படமும்
நடிக்க
ஒப்புக்கொள்ளும்போது
வரும் முன்பணத்தில்
முதல் நூறு டாலருக்கு
புத்தகம் வாங்கியவர்
- சார்லி சாப்லின்
எங்கே
தங்க விரும்புகிறீர்கள்
என்று
லண்டன் தோழர்கள்
கேட்டபோது
எது
நூலகத்திற்கு
அருகில் உள்ளது
எனக் கேட்டவர்
- டாக்டர் அம்பேத்கர்
கோடி ரூபாய்
கிடைத்தால்
என்ன செய்வீர்கள்
என்று கேட்டபோது
ஒரு நூலகம்
கட்டுவேன்
என்று பதிலளித்தவர்
- மகாத்மா காந்தி
குடும்பத்தை விட்டு
வெளியேறுங்கள்
என்று
தூக்கி எறியப்பட்டபோது
நூலகம் சென்றவர்
- பேரறிஞர் இங்கர்சால்
நான் மறைந்தபின்
உடல்மீது
மலர்மாலைகள்
வைக்காதீர்கள்
என் மடிமீது
புத்தகங்களைப்
பரப்புங்கள் என்று
கேட்டுக்கொண்டவர்
- ஜவஹர்லால் நேரு
மரண தண்டனை
விதிக்கப்பட்டு
தூக்கு கயிற்றைத்
தனது கழுத்தில்
மாட்டும்வரை
படித்துக்
கொண்டிருந்தவர்
- உமர் முக்தர்
விமானத்தில் போகாமல்
பம்பாய்க்குக்
காரில் மூன்று நாள்
பயணம் செய்து
மெனக்கெட்டது ஏன்
என்று வினவியபோது
பத்து புத்தகங்கள்
படிக்க வேண்டியிருந்தது
என்று பதிலளித்தவர்
- பேரறிஞர் அண்ணா
தண்டனை விதிக்கப்பட்டு
தனக்கு விஷம்
கொடுக்கப்படும்வரை
படித்துக்
கொண்டிருந்தவர்
- சாக்ரடீஸ்
நான் இன்னும் வாசிக்காத
நல்ல புத்தகம் ஒன்றை
வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே
என் தலைசிறந்த நண்பன்
என்று கூறியவர்
- ஆபிரகாம் லிங்கன்
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கியம் – வாசிப்பைச் சுவாசிப்பாய்க் கொண்டவர்கள்
No comments:
Post a Comment