Wednesday, December 25, 2019

16) அகநானூறு


சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு


இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)


1) நற்றிணை (Nattrinai)
2) குறுந்தொகை (Kurunthogai)
3) ஐங்குறுநூறு (Aingkurunuuru)
4) பதிற்றுப்பத்து (Pathitrupaththu)
5) பரிபாடல் (Paripaadal)
6) கலித்தொகை (Kaliththogai)
7) அகநானூறு (Aganaanuuru)
8) புறநானூறு (Puranaanuuru)

என எட்டுத்
தொகுதிகளாகத்
தொகுக்கப்பட்ட
எட்டு நூல்கள்

எட்டுத்தொகை


இங்கு


எட்டுத்தொகை
நூல்களில் ஒன்றான
அகநானூறு
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்தும் கலியே யகம்புறமென்
றித்திறத்த வெட்டுத் தொகை

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ
றுஒத்த பதிற்றுப்பத் துஓங்கு பரிபாடல்
கற்றறிந்தா ர்ஏத்தும் கலியே அகம்புறம்என்
றுஇத்திறத்த எட்டுத் தொகை

என

எட்டுத்தொகை
நூல்களுள்
ஏழாவதாக
இடம்பெறுவது

அலெக்சாண்டரின்
படையெடுப்புக்கு அஞ்சி
நந்தர்கள்
தமது
செல்வங்களையெல்லாம்
கங்கையாற்றின் அடியில்
புதைத்துவைத்த செய்தி
இடம் பெறுவது

பழங்காலத்
தமிழர்களின்
திருமண விழா
நடைமுறைகளை
நமக்கு விளக்குவது

கிராம நிர்வாக சபை
உறுப்பினரைத்
தேர்ந்தெடுக்க
பழங்காலத்தில்
பயன்படுத்தப்பட்ட
குடவோலை
தேர்தல் முறை
குறித்து கூறுவது

அகநானூறு

(அகம் + நான்கு + நூறு = அகநானூறு)


சங்க
இலக்கியங்களுள்
வரலாற்றுச்
செய்திகளை
அதிகமாக கூறுகின்ற

இந்நூல்
(அகநானூறு)


(பாடியவர்
எண்ணிக்கை)

ஏறத்தாழ
நூற்றுநாற்பத்தைந்து (145)
புலவர்களால்

(114, 117, 165
பாடல்களைப்
பாடியவர்
இன்னார் எனத்
தெரியவில்லை)


(பாடல்களின்
அடியெல்லை)

பதிமூன்று (13) அடிச்
சிற்றெல்லையும்
முப்பத்தொன்று (31) அடிப்
பேரெல்லையும்
கொண்டு


(பாடல்களின்
பொருள்)

அகப்பொருள்
குறித்து


(பாடல்களின்
பா வகை)

ஆசிரியப்பாவால்
பாடப்பட்ட


(பாடல்கள்
எண்ணிக்கை)

நானூறு (400)
பாடல்கள் கொண்ட
தொகுப்பு

(கடவுள் வாழ்த்துடன்
நானூற்றொன்று (401)
பாடல்கள்)


இந்நூலின்
(அகநானூறு நூலின்)


மூவகை
பகுப்பு

களிற்றியானைநிரை (1-120)
(120 பாடல்கள்)

மணிமிடைப்பவளம் (121-300)
(180 பாடல்கள்)

நித்திலக்கோவை (301-400)
(100 பாடல்கள்)


இதனை
(மூவகை பகுப்பினை)
உணர்த்தும்
பழம்பாடல்


களித்த மும்மதக் களிற்றியா னைநிரை
மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம்
மேவிய நித்திலக் கோவை என்றாங்கு
அத்தகு பண்பின் முத்திறம்

களித்த மும்மதக் களிற்றியா னைநிரை
மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம்
மேவிய நித்திலக் கோவை என்றாங்கு
அத்தகு பண்பின் முத்திறம்


இந்நூலில்
(அகநானூறு நூலில்)


திணை
வைப்புமுறை

1, 3, 5, 7, 9
என முடியும்
200 பாடல்கள்
பாலைத்திணை

4 என முடியும்
40 பாடல்கள்
முல்லைத்திணை

6 என முடியும்
40 பாடல்கள்
மருதத்திணை

0 என முடியும்
40 பாடல்கள்
நெய்தல்திணை

2, 8 என முடியும்
80 பாடல்கள்
குறிஞ்சித்திணை


இதனை
(திணை வைப்புமுறையை)
விளக்கும்
பழம்பாடல்


ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறா தவைகுறிஞ்சிக் கூற்று.

ஒன்றுமூன் றுஐந்துஏழுஒன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐஇரண்டு
கூறா தவைகுறிஞ்சிக் கூற்று


இந்நூலைத்
(அகநானூறு நூலைத்)


தொகுத்தவர்

மதுரை
உப்பூரிக்குடிக்கிழார் மகனார்
உருத்திரசன்மன்


தொகுப்பித்தவர்

பாண்டியன்
உக்கிரப் பெருவழுதி


இதில்
(அகநானூறு நூலில்)
இடம்பெறும்


கடவுள் வாழ்த்து
பாடலைப்
பாடியவர்

பாரதம் பாடிய
பெருந்தேவனார்


கடவுள் வாழ்த்து
பாடலில்
குறிப்பிடப்படும்
கடவுள்

சிவபெருமான்


இதன்
(அகநானூறு நூலின்)


வேறு பெயர்கள்

அகம்
அகப்பாட்டு
நெடுந்தொகை
நெடுந்தொகை நானூறு
நெடும்பாட்டு
பெருந்தொகை நானூறு


இந்நூலுக்கு
(அகநானூறு நூலுக்கு)


முதலில்
உரை எழுதியவர்கள்

நாவலர்
நா.மு. வேங்கடசாமி நாட்டார்

கரந்தைக் கவியரசு
இரா. வேங்கடாசலம் பிள்ளை

ஆகிய இருவரும்
இணைந்து


இந்நூலை
(அகநானூறு நூலை)


முதலில்
பதிப்பித்தவர்

கம்பர் விலாசம்
வே. இராசகோபால் ஐயங்கார்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கியம் பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள் எட்டுத்தொகை 07-அகநானூறு

Tamil Literature Pathinenmelkanakku Noolgal Ettuththogai (Eight Anthologies) 07-Aganaanuru



No comments:

Post a Comment