நூல்கள்
வாசிக்கும் பழக்கம்
நல்வாழ்வுக்கு
வாசல் அமைக்கும்
ஆம்...
நூல்களை
வாசிப்பது
மனிதனுக்கு
அறம் புகட்டிடும்
ஆக்கம் அளித்திடும்
இறை காட்டிடும்
ஈகை வளர்த்திடும்
உண்மை உரைத்திடும்
ஊக்கம் கொடுத்திடும்
எளிமை பழக்கிடும்
ஏற்றம் தந்திடும்
பண்பு உணர்த்திடும்
பயன் நல்கிடும்
வசந்தம் வழங்கிடும்
வாழ்நாள் பெருக்கிடும்
அதுமட்டுமல்ல...
மனிதனின்
அறியாமை அகற்றிடும்
ஆணவம் அழித்திடும்
இன்னல் தீர்த்திடும்
ஏழ்மை ஒழித்திடும்
குற்றம் களைந்திடும்
கோபம் தணித்திடும்
சஞ்சலம் நீக்கிடும்
சிந்தனை வளர்த்திடும்
திறமை பெருக்கிடும்
தூய்மை காத்திடும்
பேதமை மாற்றிடும்
வாட்டம் போக்கிடும்
மேலும்
மனிதனை
அறிஞனாய்
ஆசானாய்
கலைஞனாய்
கவிஞனாய்
சித்தனாய்
புத்தனாய்
ஞானியாய்
முனிவனாய்
தலைவனாய்
தியாகியாய்
வீரனாய்
விவேகியாய்
மாற்றிடும்
உலகிற்கும்
காட்டிடும்
இதுமட்டுமல்ல
இன்னும்
சொல்லிக்கொண்டே
செல்லலாம்
இதுபோல்
எண்ணற்ற
நன்மைகள்
புரிந்திடும்
அள்ள அள்ள
குறையாத
அட்சயப் பாத்திரங்களாம்
நினைத்த மணம்
பரப்பும்
பாரிஜாத மலர்களாம்
கேட்டது எல்லாம்
கொடுக்கும்
கற்பக விருட்சங்களாம்
புத்தகங்களை
நாம்
நமது வாழ்நாள்
முழுதும்
வாசிப்போம்
நேசிப்போம்
சுவாசிப்போம்
பிறரையும்
வாசிக்கச் செய்வோம்
நேசிக்கச் செய்வோம்
சுவாசிக்கச் செய்வோம்
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கியம் – வாசிப்பின் பயன்கள்
Tamil Literature – Benefits of Reading
No comments:
Post a Comment