சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)
1) நற்றிணை
(Nattrinai)
2) குறுந்தொகை
(Kurunthogai)
3) ஐங்குறுநூறு
(Aingkurunuuru)
4) பதிற்றுப்பத்து
(Pathitrupaththu)
5) பரிபாடல்
(Paripaadal)
6) கலித்தொகை
(Kaliththogai)
7) அகநானூறு (Aganaanuuru)
8) புறநானூறு
(Puranaanuuru)
என எட்டுத்
தொகுதிகளாகத்
தொகுக்கப்பட்ட
எட்டு நூல்கள்
எட்டுத்தொகை
இங்கு
எட்டுத்தொகை
நூல்களில் ஒன்றான
குறுந்தொகை
குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
நற்றிணை
நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த
பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா
ரேத்தும் கலியே யகம்புறமென்
றித்திறத்த
வெட்டுத் தொகை
நற்றிணை
நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ
றுஒத்த
பதிற்றுப்பத் துஓங்கு பரிபாடல்
கற்றறிந்தா
ர்ஏத்தும் கலியே அகம்புறம்என்
றுஇத்திறத்த
எட்டுத் தொகை
என
எட்டுத்தொகை
நூல்களுள்
இரண்டாவதாக
சொல்லப்படுவது
நல்ல என்ற
அடைமொழியுடன்
சிறப்பித்து
உரைக்கப்படுவது
முதலில்
தொகுக்கப்பட்ட
தொகை நூலாகக்
கருதப்படுவது
உரையாசிரியர்களால்
மிகுதியாக
மேற்கோள் காட்டி
எடுத்தாளப்பெற்றது
குறுந்தொகை
(குறுமை + தொகை = குறுந்தொகை)
குறைந்த
அடிகளையுடைய
பாக்களாலான
இந்நூல்
(குறுந்தொகை)
(பாடியவர்
எண்ணிக்கை)
இருநூறுக்கும்
மேற்பட்ட
புலவர்களால்
(பாடல்களின்
அடியெல்லை)
நான்கு (4) அடிச்
சிற்றெல்லையும்
எட்டு (8) அடிப்
பேரெல்லையும்
கொண்டு
(307, 391-ஆம் பாடல்கள்
9 அடிகளாலானது)
(பாடல்களின்
பொருள்)
அகப்பொருள்
குறித்து
(பாடல்களின்
பா வகை)
ஆசிரியப்பாவால்
பாடப்பட்ட
(பாடல்கள்
எண்ணிக்கை)
நானூற்றொன்று (401)
பாடல்கள் கொண்ட
தொகுப்பு
(கடவுள் வாழ்த்துடன்
நானூற்றிரண்டு (402)
பாடல்கள்)
இந்நூலைத்
(குறுந்தொகை நூலைத்)
தொகுத்தவர்
உப்பூரிக்குடிக்கிழார்
மகனார் பூரிக்கோ
தொகுப்பித்தவர்
யாரெனத்
தெரியவில்லை
இதில்
(குறுந்தொகை நூலில்)
இடம்பெறும்
கடவுள் வாழ்த்து
பாடலைப்
பாடியவர்
பாரதம் பாடிய
பெருந்தேவனார்
கடவுள் வாழ்த்து
பாடலில்
குறிப்பிடப்படும்
கடவுள்
முருகன்
இதன்
(குறுந்தொகை நூலின்)
வேறு பெயர்கள்
நல்ல குறுந்தொகை
குறுந்தொகை நானூறு
(இறையனார்
களவியல் உரை கூறுகிறது)
இந்நூலை
(குறுந்தொகை நூலை)
முதலில்
பதிப்பித்தவர்
சௌரி பெருமாள்
அரங்கனார்
இந்நூலில்
(குறுந்தொகை நூலில்)
இடம்பெறும்
பாடல் தொடர்களால்
பெயர் பெற்ற
குறுந்தொகைப்
புலவர்கள்
அணிலாடு முன்றிலார்
குப்பைக் கோழியார்
காக்கை பாடினியார்
விட்ட குதிரையார்
மீனெறி தூண்டிலார்
வெள்ளி வீதியார்
செம்புலப் பெயல்நீரார்
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள் – எட்டுத்தொகை – 02-குறுந்தொகை
Tamil Literature – Pathinenmelkanakku Noolgal – Ettuththogai (Eight Anthologies) – 02-Kurunthogai
No comments:
Post a Comment