Wednesday, December 25, 2019

14) பரிபாடல்


சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு


இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)


1) நற்றிணை (Nattrinai)
2) குறுந்தொகை (Kurunthogai)
3) ஐங்குறுநூறு (Aingkurunuuru)
4) பதிற்றுப்பத்து (Pathitrupaththu)
5) பரிபாடல் (Paripaadal)
6) கலித்தொகை (Kaliththogai)
7) அகநானூறு (Aganaanuuru)
8) புறநானூறு (Puranaanuuru)

என எட்டுத்
தொகுதிகளாகத்
தொகுக்கப்பட்ட
எட்டு நூல்கள்

எட்டுத்தொகை


இங்கு


எட்டுத்தொகை
நூல்களில் ஒன்றான
பரிபாடல்
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்தும் கலியே யகம்புறமென்
றித்திறத்த வெட்டுத் தொகை

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ
றுஒத்த பதிற்றுப்பத் துஓங்கு பரிபாடல்
கற்றறிந்தா ர்ஏத்தும் கலியே அகம்புறம்என்
றுஇத்திறத்த எட்டுத் தொகை

என

எட்டுத்தொகை
நூல்களுள்
ஐந்தாவதாகச்
சொல்லப்படுவது

தொகை நூல்களுள்
பா வகையால்
பெயர்பெற்றது

ஓங்கு எனும்
அடைமொழியுடன்
ஆன்றோர்
புகழ்ந்த
பெருமையுடையது

தொகை நூல்களுள்
அகமும் புறமும்
கலந்தமைந்தது

பாண்டிய
நாட்டைச்
சிறப்பிக்கவே
பாடப்பட்டது

உலகின்
தோற்றம் குறித்து
கூறும் நூல்

பரிபோல்
கால்களால்
பரிந்து
நடைபோடும்
பண்ணிசைப்
பாடல்களைக்
கொண்டது

தொகை நூல்களுள்
இசையோடு
பாடப்பட்டது

பரிபாடல்


இனிய
ஓசைநயம்
உடைய
பரிபாட்டு
என்னும்
இசைப்பா
வகையிலான

இந்நூல்
(பரிபாடல்)


(பாடியவர்
எண்ணிக்கை)

பதிமூன்று (13)
புலவர்களால்


(பாடல்களின்
அடியெல்லை)

இருபத்தைந்து (25) அடிச்
சிற்றெல்லையும்
நானூறு (400) அடிப்
பேரெல்லையும்
கொண்டு

(நமக்குக் கிடைத்துள்ள
பரிபாடல்களில்
நூற்று நாற்பது (140)
அடிகளுக்கு மேல் இல்லை)


(பாடல்களின்
பொருள்)

அகப்பொருள்
புறப்பொருள்
ஆகிய
இரண்டையும்
குறித்து


(பாடல்களின்
பா வகை)

பரிபாட்டு
பா வகையால்
பாடப்பட்ட

(பல நூறு
வருடங்களுக்கு
முன்பே
வழக்கொழிந்த
பா வகை)


(பாடல்கள்
எண்ணிக்கை)

எழுபது (70)
பாடல்கள் கொண்ட
தொகுப்பு

(கிடைத்தவை 22)


இதன்
(பரிபாடல் நூலின்)
தொகுப்பை
விளக்குமொரு
வெண்பா


திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் *காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்.

திருமாற் குஇருநான்கு செவ்வேட்கு முப்பத்
துஒருபாட்டுக் *காடுகாட் குஒன்று - மருவினிய
வையைஇரு பத்துஆறு மாமதுரை நான்குஎன்ப
செய்யபரி பாடல் திறம்.

*கார்கோளுக்கு

அதாவது

திருமாலுக்கு
எட்டு (8)
முருகனுக்கு
முப்பத்தொன்று (31)
கடலுக்கு
ஒன்று (1)
வையைக்கு
இருபத்தாறு (26)
மதுரைக்கு
நான்கு (4)
என
பாடப்பட்ட

எழுபது (70)
பாடல்கள்
கொண்ட
தொகுப்பு


பாடல்களைப்
பாடிய
பதின்மூவர்

நல்லந்துவனார்
இளம்பெருவழுதியார்
கடுவனிளவெயினனார்
கரும்பிள்ளைப்பூதனார்
கீரந்தையார்
குன்றம்பூதனார்
கேசவனார்
நப்பண்ணனார்
நல்லச்சுதனார்
நல்லழுசியார்
நல்லெழுனியார்
நல்வழுதியார்
மேயோடக்கோவனார்


பாடலுக்குப்
பண் வகுத்தோர்

கண்ணகனார்
கண்ணனாகனார்
கேசவனார்
நந்நாகனார்
நல்லச்சுதனார்
நன்னாகனார்
நாகனார்
பித்தாமத்தர் (பித்தாமக்கர்)
பெட்டனாகனார்
மருத்துவனல்லச்சுதனார்


இந்நூலைத்
(பரிபாடல் நூலைத்)


தொகுத்தவர்
தொகுப்பித்தவர்

யாரெனத்
தெரியவில்லை


இதன்
(பரிபாடல் நூலின்)


வேறு பெயர்கள்

பரிபாட்டு
ஓங்கு பரிபாடல்
இசைப்பாட்டு
பொருட்கலவை நூல்
தமிழின் முதல் இசைபாடல் நூல்


இந்நூலை
(பரிபாடல் நூலை)


முதலில்
பதிப்பித்தவர்

தமிழ்த் தாத்தா
டாக்டர் உ.வே. சாமிநாதையர்


இந்நூலுக்கு
(பரிபாடல் நூலுக்கு)


உரை
எழுதியவர்

பரிமேலழகர்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கியம் பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள் எட்டுத்தொகை 05-பரிபாடல்

Tamil Literature Pathinenmelkanakku Noolgal Ettuththogai (Eight Anthologies) 05-Paripaadal



No comments:

Post a Comment