சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
1) நற்றிணை
(Nattrinai)
2) குறுந்தொகை
(Kurunthogai)
3) ஐங்குறுநூறு
(Aingkurunuuru)
4) பதிற்றுப்பத்து
(Pathitrupaththu)
5) பரிபாடல்
(Paripaadal)
6) கலித்தொகை
(Kaliththogai)
7) அகநானூறு
(Aganaanuuru)
8) புறநானூறு
(Puranaanuuru)
என எட்டுத்
தொகுதிகளாகத்
தொகுக்கப்பட்ட
எட்டு நூல்கள்
எட்டுத்தொகை
இங்கு
எட்டுத்தொகை
நூல்களில் ஒன்றான
நற்றிணை
குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
நற்றிணை
நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த
பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா
ரேத்தும் கலியே யகம்புறமென்
றித்திறத்த
வெட்டுத் தொகை
நற்றிணை
நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ
றுஒத்த
பதிற்றுப்பத் துஓங்கு பரிபாடல்
கற்றறிந்தா
ர்ஏத்தும் கலியே அகம்புறம்என்
றுஇத்திறத்த
எட்டுத் தொகை
என
எட்டுத்தொகை
நூல்களுள்
முதலாவதாக
வைத்து
எண்ணப்படுவது
நல் என்ற
அடைமொழி
பெற்று
போற்றப்படுவது
தூது
இலக்கியத்திற்கு
வழிகாட்டி
என்று
சொல்லப்படுவது
நற்றிணை
(நன்மை + திணை =
நற்றிணை)
இது
(நன்னூல்)
தொகை நூல்களுள்
திணை என்ற
பெயர் பெற்ற
ஒரே நூல்
சிறந்த ஒழுக்கம்
(நல்ல ஒழுக்கலாறு)
என்னும்
பொருள் கொண்ட
இந்நூல்
(நற்றிணை)
(பாடியவர்
எண்ணிக்கை)
ஏறத்தாழ
நூற்றெழுபத்தைந்து
(175)
புலவர்களால்
(பாடல்களின்
அடியெல்லை)
ஒன்பது (9) அடிச்
சிற்றெல்லையும்
பன்னிரண்டு (12) அடிப்
பேரெல்லையும்
கொண்டு
(பாடல்களின்
பொருள்)
அகப்பொருள்
குறித்து
(பாடல்களின்
பா வகை)
ஆசிரியப்பாவால்
பாடப்பட்ட
(பாடல்கள்
எண்ணிக்கை)
நானூறு (400)
பாடல்கள் கொண்ட
தொகுப்பு
(கடவுள் வாழ்த்துடன்
நானூற்றொன்று (401)
பாடல்கள்)
இந்நூலைத்
(நற்றிணை நூலைத்)
தொகுத்தவர்
யாரெனத்
தெரியவில்லை
தொகுப்பித்தவர்
பன்னாடு தந்த
பாண்டியன்
மாறன் வழுதி
இதில்
(நற்றிணை நூலில்)
இடம்பெறும்
கடவுள் வாழ்த்து
பாடலைப்
பாடியவர்
பாரதம் பாடிய
பெருந்தேவனார்
கடவுள் வாழ்த்து
பாடலில்
குறிப்பிடப்படும்
கடவுள்
திருமால்
இதன்
(நற்றிணை நூலின்)
வேறு பெயர்கள்
நற்றிணை நானூறு
தூதின் வழிகாட்டி
இந்நூலுக்கு
(நற்றிணை நூலுக்கு)
முதலில்
உரை எழுதியவர்
பின்னத்தூர்
அ. நாராயணசாமி ஐயர்
இந்நூலை
(நற்றிணை நூலை)
முதலில்
பதிப்பித்தவர்
பின்னத்தூர்
அ. நாராயணசாமி ஐயர்
இந்நூலில்
(நற்றிணை நூலில்)
இடம்பெறும்
பாடல் தொடர்களால்
பெயர் பெற்ற
நற்றிணைப் புலவர்கள்
வண்ணப்புறக் கந்தத்தனார்
மலையனார்
தனிமகனார்
விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்
தும்பிசேர்க் கீரனார்
தேய்புரிப்
பழங்கயிற்றினார்
மடல் பாடிய மாதங்கீரனார்
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள் – எட்டுத்தொகை – 01-நற்றிணை
No comments:
Post a Comment