Wednesday, December 25, 2019

18) பத்துப்பாட்டு


பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள்
பத்துப்பாட்டு

Pathinenmelkanakku Noolgal
Paththupaattu (Ten Idylls)

பாவலரொடு
காவலரும்
கைகோர்த்து
கவிபுனைந்து

கன்னித்தமிழ்
வளர்த்த காலம்
சங்க காலம்


அக்காலத்தில்தான்


பழங்காலத்தில்
தமிழ் மொழியில்
தோன்றி வளர்ந்த
இலக்கியங்களில்

அழிந்து
மறைந்தவை
போக
எஞ்சியவை
காக்கப்பட்டு

புலவர்களாலும்
புரவலர்களாலும்
தொகுக்கப்பட்டு

சங்க இலக்கியம்
என்ற
பெயரால்
குறிக்கப்பட்டது


சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
அப்பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு


இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)


இங்கு


பழந்தமிழ்
நாட்டினரின்
வாழ்க்கை முறை
பண்பாட்டுச் சிறப்பு
பற்றிய

பல
அரிய தகவல்கள்
பொதிந்து கிடக்கும்


பத்துப்பாட்டு
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


 1) திருமுருகாற்றுப்படை (Thirumurugaatrupadai)
 2) பொருநராற்றுப்படை (Porunaraatrupadai)
 3) சிறுபாணாற்றுப்படை (Sirupaanaatrupadai)
 4) பெரும்பாணாற்றுப்படை (Perumpaanaatrupadai)
 5) முல்லைப்பாட்டு (Mullaipaattu)
 6) மதுரைக்காஞ்சி (Maduraikaanchi)
 7) நெடுநல்வாடை (Nedunalvaadai)
 8) குறிஞ்சிப்பாட்டு (Kurinjipaattu)
 9) பட்டினப்பாலை (Pattinappaalai)
10) மலைபடுகடாம் (Malaipadukadaam)

என

நீண்ட நெடும்
பாடல்களாக
அமைந்த
பத்துப் பாடல்களின்
தொகுப்பு

பத்துப்பாட்டு
(தொடர் நிலைச் செய்யுள்)


பாட்டு
எனவும்
அழைக்கப்பெறும்

இதில்
(பத்துப்பாட்டில்)


இடம்பெறும்
பாடல்கள்
ஒவ்வொன்றும்

பல்வேறு
காலகட்டங்களில்
வெவ்வேறு
ஆசிரியர்களால்


(பாடல்களின்
பா வகை)

நீண்ட
ஆசிரியப்பாவால்
இயற்றப்பட்டவை


அவை


(பாடல்களின்
அடியெல்லை)

103 முதல் 782
அடிகளைக் கொண்ட
நீளமான பாடல்கள்

உதாரணமாக

முல்லைப்பாட்டு
103 அடிகள் உடைய
மிகச் சிறிய பாடல்

மதுரைக்காஞ்சி
782 அடிகள் உடைய
மிகப் பெரிய பாடல்;


இவற்றுள்
(பத்துப்பாட்டு
நூல்களுள்)


அகப்பொருள்
பற்றிய
நூல்கள்

முல்லைப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை


புறப்பொருள்
பற்றிய
நூல்கள்

திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)
மதுரைக்காஞ்சி


அகமும் புறமும்
கலந்தமைந்த நூல்

நெடுநல்வாடை


ஆற்றுப்படை
நூல்கள்

திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)


இந்நூலை
(பத்துப்பாட்டு நூலை)


முதலில்
பதிப்பித்தவர்

தமிழ்த் தாத்தா
டாக்டர் உ.வே. சாமிநாதையர்


பத்துப்பாட்டு
நூல்களைப்
பட்டியலிடும்
ஒரு வெண்பா


முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி -  மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கியம்
Guru Vishnu – Tamil Literature




No comments:

Post a Comment