Wednesday, December 25, 2019

22) பெரும்பாணாற்றுப்படை


சங்க இலக்கியங்கள்
என்று
குறிப்பிடப்படும்
பழந்தமிழ்
நூல்களின் தொகுப்பு

எட்டுத்தொகை
பத்துப்பாட்டு


இவையே
பதினெண்மேற்கணக்கு
நூல்கள்
(பதினெண்மேல்கணக்கு
நூல்கள்)


 1) திருமுருகாற்றுப்படை (Thirumurugaatrupadai)
 2) பொருநராற்றுப்படை (Porunaraatrupadai)
 3) சிறுபாணாற்றுப்படை (Sirupaanaatrupadai)
 4) பெரும்பாணாற்றுப்படை (Perumpaanaatrupadai)
 5) முல்லைப்பாட்டு (Mullaipaattu)
 6) மதுரைக்காஞ்சி (Maduraikaanchi)
 7) நெடுநல்வாடை (Nedunalvaadai)
 8) குறிஞ்சிப்பாட்டு (Kurinjipaattu)
 9) பட்டினப்பாலை (Pattinappaalai)
10) மலைபடுகடாம் (Malaipadukadaam)

என
நீண்ட நெடும்
பாடல்களாக
அமைந்த
பத்துப் பாடல்களின்
தொகுப்பு

பத்துப்பாட்டு
(தொடர் நிலைச் செய்யுள்)


இங்கு


பத்துப்பாட்டு
நூல்களில் ஒன்றான
பெரும்பாணாற்றுப்படை
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து

என

பத்துப்பாட்டு
நூல்களுள்
நான்காவதாக
இடம்பெறுவது

திருவெஃகாவில்
குடிகொண்ட
திருமாலின்
திருக்கோலத்தை
அழகுற விளக்குவது

தொண்டைமான்
இளந்திரையனின்
கொடைத் திறத்தைச்
சிறப்பித்துக் கூறுவது

ஆயர்குலப்
பெண்கள்
பால்பொருட்களை
விற்றுக்
குடும்பத்தைக்
காத்ததைச் சொல்வது

இளந்திரையன்
நாட்டின்
ஐந்திணை வளமும்
அங்கு வாழ்ந்தவர்
வாழ்க்கை முறையும்
விருந்தோம்பல் பண்பும்
விளங்கும்படி உரைப்பது


பெரும்பாணாற்றுப்படை

(பெரும்பாண் + ஆற்றுப்படை = பெரும்பாணாற்றுப்படை)

(பெரும்பாண்
இருபத்தொன்று (21)
நரம்புகள் கொண்ட
பேரியாழ் மீட்டிக்கொண்டு
பாடுபவர்கள்)


தொண்டைமான்
இளந்திரையனைப்
பாட்டுடைத்தலைவனாகக்
கொண்ட

இந்நூல்
(பெரும்பாணாற்றுப்படை)


(பாடல்
ஆசிரியர்)

கடியலூர்
உருத்திரங்கண்ணனார்
என்பவரால்


(பாடல்களின்
அடியெல்லை)

500 அடிகள்
கொண்ட
தொடர் நிலைச்
செய்யுளாய்


(பாடல்களின்
பொருள்)

புறப்பொருள்
குறித்து


(பாடல்களின்
பா வகை)

ஆசிரியப்பாவால்
பாடப்பட்ட


(சிற்றிலக்கிய
வகை)

பொருளைப் பெற
ஆற்றுப்படுத்துகின்ற

ஒரு
ஆற்றுப்படை நூல்


இங்கு


ஆற்றுப்படை
என்பதன் பொருள்
வழிப்படுத்தல்
அல்லது
வழிகாட்டுதல்


அதாவது


பரிசு பெற்ற
ஒருவர்

தன்னைப்போல்
பரிசு பெறச்
செல்லும்
இன்னொருவரை

தன்னைப்போல்
பயனடைய
வேண்டி

தான்
பரிசு பெற்ற
வள்ளலிடமோ
அரசரிடமோ
வழிப்படுத்துவதே
ஆற்றுப்படை


அவ்வகையில்
இது
(பெரும்பாணாற்றுப்படை)


பரிசில் பெற்ற
பாணன் ஒருவன்
(பேரியாழை வாசிக்கும் பாணன்)
பரிசில் பெறக்கருதிய
பாணனைத்

தான் பரிசு பெற்ற
இளந்திரையனிடம்
ஆற்றுப்படுத்துவதாக
அமைந்தது


இங்கு


பாணர்
என்பது
பண் அமைத்தல்
இசை மீட்டுதல்
நடனம் ஆடுதல்
ஆகிய கலைகளைத்
தொழிலாகக்
கொண்டோரைக்
குறிப்பிடுகின்றது


மேலும்


இந்நூல்
(பெரும்பாணாற்றுப்படை)


பரிசில் பெறச்
செல்வோரால்
பெயர் பெற்றது


இதன்
(பெரும்பாணாற்றுப்படை
நூலின்)


வேறு பெயர்கள்

பாணாறு
சமுதாயப் பாட்டு


-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கியம் பதினெண் மேற்கணக்கு / மேல்கணக்கு நூல்கள் பத்துப்பாட்டு - பெரும்பாணாற்றுப்படை

Tamil Literature Pathinenmelkanakku Noolgal Paththupaattu (Ten Idylls) - Perumpaanaatrupadai



No comments:

Post a Comment