கல்வி என்பது
அறியாமை நீக்கி
அறிவை பெருக்கி
மனிதனை
மனிதனாக்கி
அவனுக்கு
அறம்
பொருள்
இன்பம்
வீடு
எனும்
நால்வகைப்
பயன்களை
வாழ்வில்
வழங்குவது
அந்த
உண்மையை
உணர்ந்தும்
நாம்
பள்ளியில்
படித்தது
பாடத்திட்டம் மட்டுமே
கல்லூரியில்
கற்றது
காசாக்க மட்டுமே
பணத்தால்
பெற்றது
பட்டங்கள் மட்டுமே
தேர்வில்
வாங்கியது
மதிப்பெண்கள் மட்டுமே
வேலையைத்
தேடித்தேடி
அலைந்தது மட்டுமே
அலுவல்களில்
அடைந்தது
அவமானங்கள் மட்டுமே
உறவுகளால்
உணர்ந்தது
நடிப்பினை மட்டுமே
வணிகத்தில்
வாங்கியது
கலப்படங்கள் மட்டுமே
அரசியலில்
அறிந்தது
சுருட்டல்கள் மட்டுமே
அதிகாரத்தால்
அடைந்தது
அல்லல்கள் மட்டுமே
ஞானிகளில்
கண்டது
போலிகள் மட்டுமே
பக்தியில்
பார்த்தது
பகல்வேசம் மட்டுமே
வாழ்க்கையில்
தொட்டது
தோல்விகள் மட்டுமே
இருப்பினும்
ஏட்டுக்
கல்விக்கு மட்டுமே
ஏற்றம்
தந்து விட்டோம்
ஏணியாகவும்
இருந்து விட்டோம்
அதனால்
நாகரீகம் என்னும்
நரக வாழ்க்கையில்
சுயநலமே
பெரிதாகி
பொதுநலத்தைப்
புதைத்துவிட்டு
பணமே
கதியென்று
போலியான
வாழ்க்கையில்
சிக்கி
சீரழிந்து வரும்
நமது
வாழ்க்கையை
அர்த்தம் உள்ளதாக்க
ஆனந்த மயமாக்க
அமைதி நிறைந்ததாக்க
கற்க வேண்டிய
வாழ்க்கைக்
கல்வியைக்
கற்றுக் கொள்ளாமல்
காலத்தைக்
கடந்து விட்டோம்
வாழ்க்கைப் பாதையில்
வழி தவறி
வந்து விட்டோம்
இனியும் வேண்டாம்
இந்த இழிநிலை
பட்டங்கள் பெற்றும்
பயனில்லை நமக்கு
ஏட்டு சுரைக்காய்
கறிக்கு உதவாது
வெறும்
ஏட்டுக் கல்வி
வாழ்க்கைக்கு உதவாது
இனியாவது
அறிவு
அனுபவம்
ஆற்றல்
ஆன்மீகம்
ஆகியவற்றை
அளித்திடும்
வாழ்க்கைக் கல்வி
பயின்று
பயன்பெறுவோம்
அதற்கான
ஒரே வழி
பள்ளி
பல்கலைக் கழகப்
பாட நூல்களோடு
நூலகத்தில் உள்ள
நூல்களையும்
மாணவப் பருவத்தில்
மட்டுமல்ல
மாணவப் பருவம்
முடிந்தாலும்
வாழ்நாள் முழுதும்
வாசகனாய் இருந்து
வாசிப்பது ஒன்றே.
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கியம் – வாழ்க்கைக் கல்வி
Tamil Literature – Life Education
No comments:
Post a Comment